Nothing யின் புதிய போனின் வருகைக்காக பழைய போனில் அதிரடி டிஸ்கவுண்ட்

Updated on 04-Mar-2025

Nothing இன்று அதன் Nothing Phone 3a சீரிஸ் புதிய போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது இந்த ப்ஹுதிய போனின் வரிசையின் கீழ் அதன் Nothing Phone 3a மற்றும் the Nothing Phone 3a Pro ஆகிய போன்களை அறிமுகம் செய்யும், அதன் புதிய போனின் வருகையின் காரணமாக அதன் பலயபோனின் விலை Nothing Phone 2a குறைக்கப்பட்டுள்ளது

மேலும் நீங்கள் இந்த Nothing Phone 2a போனை வாங்க நினைத்தால் இன்று இந்த ஆபர் வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் விலையில் வாங்க முடியும். மேலும் பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

Nothing Phone 2a விலை மற்றும் ஆபர் நன்மைகள்

இந்தியாவில்Nothing Phone 2a ரூ.23,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, ​​அமேசானில், போன் 2ஏ ரூ.19,498க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி பெறலாம். இன்னும் அதிகமாக ஸ்டோரேஜ் , உங்கள் பழைய ஸ்மார்ட்போனைஎக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

Nothing Phone 2a

Nothing Phone 2a சிறப்பம்சம் .

Nothing Phone 2a 6.7-இன்ச் 120hz FHD+ AMOLED உடன் வருகிறது மற்றும் HDR10+ ஐ சப்போர்ட் செய்கிறது . இது 1,300 nits வரை ஹை ப்ரைட்னாஸ் வழங்குவதாகவும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Nothing Phone 2a ஆனது MediaTek Dimensity 7200 Pro சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயலி 12 GB வரை LPDDR4X RAM மற்றும் 256 GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு, போன் 2a 50MP முதன்மை கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைடு சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, 32MP முன் கேமரா உள்ளது. இந்த சாதனம் IP54 சான்றிதழுடன் வருகிறது. இறுதியாக, இந்த சாதனம் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: Nothing யின் புதிய போன் இந்த தேதியில் அறிமுகமாகும், ஆனா அதற்குள் பல விஷயம் அம்பலமாகியது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :