IRCTC
சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு புதிய ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) வெப்சைட்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். தற்போது, இந்த இணையதளத்தின் பீட்டா பதிப்பு ஜெய்ப்பூரில் உள்ள எம்.என்.ஐ.டி (MNIT) மாணவர்களுக்குக் காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை MNIT மாணவர்கள்தான் முன்னெடுத்ததால், IRCTC இணையதளத்தின் பீட்டா வெர்சனை ஜெய்ப்பூர் மாணவர்கள் ஆய்வு செய்தனர். ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய வெப்சைட்டில் நான்கு முக்கிய மாற்றங்கள் இடம்பெறும். இவை டிக்கெட் முன்பதிவை முன்பை விட இன்னும் எளிதாக்கும்.
தேசிய போக்குவரத்து நிறுவனத்தின்படி, அப்டேட் செய்யப்பட்ட IRCTC வெப்சைட் தற்போது இந்திய ரயில்வேயின் பயணிகள் முன்பதிவு அமைப்பு (BRS) இயந்திரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
பயணிகள் முன்பதிவு அமைப்பும் வெப்சைட்டாக அப்டேட் செய்யப்பட்டு வருவதால், முழுமையாகச் செயல்படும் புதிய IRCTC வெப்சைட் இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்.
கேப்ட்சா: இனி தேவையற்ற கேப்ட்சாக்கள் இல்லை. தேவையற்ற பாப்-அப்கள் (விளம்பரங்கள்), கண்ணைப் பறிக்கும் கிராபிக்ஸ் அல்லது கவனச்சிதறல்கள் இல்லை.
சீட் நிலவரம்: இனி அனைத்து (Classes) காலி இருக்கைகளும் ஒன்றாகத் தெளிவாகக் காட்டப்படும்.
வேகமான பணம் செலுத்துதல்: டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான படிகள் குறைக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்வது இன்னும் வேகமாகியுள்ளது.
எளிதான மறு முன்பதிவு: பயணிகளின் விவரங்கள் முன்பே சேமிக்கப்படும், இது மறு முன்பதிவை எளிதாக்குகிறது.
இதையும் படிங்க ட்ரூகாலர்க்கு TRAI யின் அதிரடி கேள்வி 1600 நம்பரிலிருந்து வரும் காலை ஸ்பேமில் சேர்ப்பது ஏன்
அறிக்கைகளின்படி, புதிய பீட்டா வெர்ஷனை ரிவ்யூ செய்யப்பட்டுள்ளது. பீட்டா வெர்ஷன் என்பது ஒரு வகையான இறுதிப் வேர்ஷனாகும் . இது டெஸ்டிங்க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவினருக்கு வழங்கப்படுகிறது. இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அவை சரிசெய்யப்பட்டு, பீட்டா பதிப்பைத் தொடர்ந்து வரும் இறுதிப் பதிப்பு பொதுமக்களுக்குக் கிடைக்கும்படி செய்யப்படுகிறது.
IRCTC-யின் புதிய வெப்சைட் , இந்திய ரயில்வேயின் ‘பயணிகள் புக்கிங் மெஷினுடன்’ (டிக்கெட் புக்கிங் முறை) இணைக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
பயணிகள் முன்பதிவு இயந்திரமும் மேம்படுத்தப்பட்டு வருவதால், முழுமையாகச் செயல்படும் புதிய IRCTC வெப்சைட்டில் வரும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்.