புதிய Aadhaar App அறிமுகம் இனி எந்த அப்டேட்டுக்கும் எங்கும் அலையை தேவை இல்லை வீட்டிலிருந்தபடி செய்யலாம்

Updated on 10-Nov-2025

UIDAI அதன் புதிய Aadhaar App அறிமுகம் செய்துள்ளது, மேலும் தற்பொழுது இந்த புதிய ஆதார் கார்ட் பற்றி அதன் அதிகாரபூர்வ UIDAI யின் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது, இந்த புதிய ஆதார் ஆப் ஸ்மார்ட்டாக வைக்க முடியும், அதாவது இந்த ஆதார் கார்டை நீங்கள் எளிதாக யாருக்கு வேண்டுமானாலும் ஷேர் செய்ய முடியும் மேலும் இது பாதுகப்பனது மேலும் இந்த ஆப் UIDAI யின் படி Android மற்றும் IOS யின் இரண்டு பயனர்களும் பயன்படுத்த முடியும் மேலும் இதன் நன்மைகள் இதை எப்படி பயன்படுத்துவது மற்றும் விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

புதிய e-Aadhaar நன்மை என்ன?

தற்பொழுது வரை எந்தவித ஆதர் தகவல் உதாரணமாக பிறந்த தேதி,பெயர் அல்லது முவரிவையை மாற்ற ஆதார் செண்டர் சென்று அதற்க்கு தேவையான டாக்யுமென்ட் சமர்பிக்க வேண்டி இருந்தது ஆனால் இனி நீங்கள் எந்த ஒரு ஆதார் சென்டரும் போக வேண்டிய அவசியமில்லை இந்த புதிய e-Aadhaar சேவையின் மூலம் உங்களின் அனைத்து தகவலையும் வீட்டிலிருந்தபடி செய்யமுடியும் அதாவது தற்பொழுது இந்த சேவையை டிஜிட்டல் முறை ஆக்கப்பட்டுள்ளது இனி நீங்கள் உங்களின் மொபைல் நம்பர்,முகவரி மற்றும் பலதகவை மாற்ற இனி எந்த ஆதார் சென்றரும் செல்ல தேவை இல்லை அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.

Aadhaar ஆப் செட்டப் எப்படி செய்வது?

  • இந்த ஆப் பயன்படுத்த மிக எளிது மற்றும் இதன் செட்டப் எளிமையாக பயன்படுத்தலாம், இதற்க்கு முன்பு முதலில் உங்களின் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து இந்த புதிய Aadhaar ஆப்பை டவுன்லோட் செய்யலாம்.
  • இதன் அடுத்த கட்டமாக அந்த ஆப்யில் கேட்கப்படும் சில பர்மிஷன் தந்து அதன் பிறகு ஆதார் நம்பர் போடவும்.
  • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட போன் நம்பரை நீங்கள் சரிபார்க்க வேண்டும். அதாவது, நீங்கள் ஆப்பை இன்ஸ்டால் செய்து போனில் , உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட போன் நம்பர் இருக்க வேண்டும். வெரிபிகேஷன் இல்லாமல், நீங்கள் ஆதார் ஆப்பை அமைப்பதைத் தொடரலாம்.
  • போன் நம்பர் வெரிபை செய்த பிறகு உங்களின் பேஸ் அதேண்டிகேஷன் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு இந்த ஆப் யில் ஒரு செக்யூரிட்டி பின் செட் செய்ய வேண்டும், இப்பொழுது நீங்கள் நிறுவனம் ஆதார் ஆப்பை பயன்படுத்த முடியும்.

இதையும் படிங்க:e-Aadhaar app: இனி எந்த வித அப்டேட்டும் வீட்டிலிருந்தபடி நிங்களே செய்யலாம்

இந்த புதிய ஆப்யில் என்ன என்ன வசதி இருக்கிறது?

  • இந்த புதிய ஆப்யில் மிக சிறந்த அம்சம் கொண்டு வந்துள்ளது, முதலில் இந்த ஆப்யின் உதவியால் உங்களுக்கு ஒரு QR கோட் வடிவில் உங்களின் ஆதரை டிஜிட்டல் முறையில் ஷேர் செய்யலாம்.
  • கூடுதலாக, உங்கள் ஐடியைப் பகிரும்போது, ​​எவ்வளவு, எந்த வகையான தகவல்களைப் பகிர விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தேர்வு செய்ய முடியும். உங்கள் ஆதார் தரவைப் பகிர வேண்டிய அவசியமில்லை என்று நீங்கள் நம்பினால், எந்தத் தகவலைப் பகிர வேண்டும், எதைப் பகிரக்கூடாது என்பதை நீங்கள் எளிதாகத் தேர்வு செய்யலாம்.
  • இந்த ஆப்யில் உங்களுக்கு பயோமெட்ரிக் தகவலை லோக் செய்யும் மற்றும் அனலாக் வசதி வசதி வழங்கப்படுகிறது இதன் மூலம் ஆதரை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
  • இதனுடன் இந்த ஆப்யில் உங்களின் மொத்த குடும்பத்தின் ஆதரையும் இந்த ஒரே ஆப்யில் ஸ்டோர் செய்ய முடியும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :