மைக்ரோசாஃப்ட் இனி எல்லாமே 2021 ஜூலை வரை டிஜிட்டல் முறையில் மட்டுமே நடைபெறும்

Updated on 07-May-2020
HIGHLIGHTS

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து நிகழ்வுகளும் ஜூலை 2021 வரை டிஜிட்டல் முறையில் நடைபெறும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க 2020 முதல் பாதியில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்படுவதாகவும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்தும் செல்லும் வகையிலான அறிவிப்பினை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது.

உலகளவில் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினை மைக்ரோசாஃப்ட் கூர்ந்து கவனித்து வருகிறது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் கால அட்டவணையை மாற்றியமைத்து வருகிறது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து நிகழ்வுகளும் ஜூலை 2021 வரை டிஜிட்டல் முறையில் நடைபெறும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து நிகழ்வுகளும் 2021 ஜூலை வரை டிஜிட்டல் முறையில் மட்டுமே நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இதனை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருப்போருக்கு ஈமெயில்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :