IRCTC
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது ஒவ்வொருத்தரும் அவர் அவர் சொந்த ஊருக்கு சென்று பண்டிகை காலத்தை கொண்டாட விரும்புகிறார்கள் அத்தகைய சூழ்நிலையில் இந்திய ரயில்வே அவர்களின் பயணிகளுக்கு ஒரு சந்தோசமான செய்திய அறிவித்துள்ளது அதாவது இனி நீங்கள் ரயிலின் பயணிக்கும் தேதியை இனி மாற்ற மாற்றம் இருந்தால் IRCTC கேன்ஸில் செய்ய தேவை இல்லை மேலும் தேவை இல்லாத கேன்ஸில் பணம் வெட்டாது இதன் முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க.
பயணிகளுக்கான டிக்கெட் நிர்வாகத்தை எளிதாக்குவதையும், கேன்ஸில் செய்வதற்கான தேவையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் அறிவித்தார். வரவிருக்கும் அம்சம் பயணிகள் தங்கள் கன்பர்மேசன் டிக்கெட்டுகளை கேன்ஸில் மீண்டும் டிக்கெட் புக்கிங் செய்வதற்குப் பதிலாக நேரடியாக ரீசெட்யுள் செய்ய அனுமதிக்கும்.
தற்பொழுது இருக்கும் விதிதியின்படி திடீர் என பயண தேதியில் மாற்றமே அல்லது ஏதோ ஒரு காரணத்தால் டிக்கெட் கேன்ஸில் செய்யப்பட்டால் அதற்க்கான பணம் வெட்டப்படும் அதாவது 48 மற்றும் 12 மணி நேரத்திற்க்கு முன்பு கன்பர்மேஷன் செய்யப்பட்ட டிக்கெட் கேன்ஸில் செய்தால் 25% சதவிகிதம் வெட்டப்படும் அதாவது புறப்பட ரெடியகாமல் இருக்கும்முன் அதே ரயில் புறப்பட்ட பின் கேன்ஸில் செய்தால் முழுசா 50% பணம் வெட்டப்படுகிறது.எனவே இந்த புதிய ரீசெட்யுல் பயனிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்
புதிய முறையின் கீழ், பயணிகள் தங்கள் பயணத் தேதியை ஆன்லைனில் மாற்றிக்கொள்ளலாம், ஆனால் விரும்பிய தேதியில் இருக்கைகள் கிடைக்கும். புதிய தேதியில் கட்டணம் அதிகமாக இருந்தால், அவர்கள் வித்தியாசத்தை மட்டுமே செலுத்த வேண்டும். கட்டணம் அப்படியே இருந்தால் அல்லது குறைவாக இருந்தால், கூடுதல் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது.
இதையும் படிங்க:UPI யில் புதிய மாற்றம் இனி பணம் அனுப்ப பின் தேவையில்லை இதை பயன்படுத்துவது எப்படி?
ரயில்வேயின் இந்த புதிய ரீசெட்யுல் அம்சம் IRCTC’ மூலம் ரயில்வே ரிசர்வேஷன் படி துல்லியமான நேரம் மற்றும் தகவலி வழங்கும் இதன் மூலம் பயணிகள் IRCTC அக்கவுன்ட் லோகின் செய்து அதில் ஏற்கனவே புக்கிங்கிளிருந்து டிக்கெட் தேதியை மாற்ற விரும்பினால் அதில் புதிய தேதியை தேர்ந்தெடுக்கவும் அதன் பிறகு அந்த தேதியின்படி எவ்வளவு சீட் இருக்கிறது என்பதை காண்பிக்கும் அதன் பிறகு நீங்கள் இன்ஸ்டன்ட்டாக டிக்கெட் புக்கிங் செய்யலாம்.
இந்த மாற்றம் பயணிகளின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் நோக்கம் கொண்டது, குறிப்பாக வேலை அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு. இது இந்திய ரயில்வேயின் தற்போதைய டிஜிட்டல் மாற்றம் மற்றும் சேவை மேம்பாட்டு முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.