UPI
உலகிலேயே அதி வேகமாக UPI மூலம் பணம் செலுத்தும் நாடாக இந்தியா மாறியுள்ளது.UPI (UPI Unified Payments Interface) பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாக. ஒரு IMF குறிப்பு இதை எடுத்துக்காட்டுகிறது, UPI மாதந்தோறும் 18 பில்லியனுக்கும் அதிகமான ட்ரேன்செக்சன் செயல்படுத்துகிறது மற்றும் தினசரி ட்ரேன்செக்சன்களில் விசாவை முந்தியுள்ளது என்று கூறுகிறது.
நிதி அயோக்கின் முன்னால் தலைமை அதிகாரி Amitabh Kant, தனது ட்விட்டர் X பக்கத்தில் UPI ட்ரேன்செக்சன் விசாவை விட முந்தி உலகிலே முதல் இடத்தில் இருப்பதாகவும் மேலும் தினசரி 650 மில்லயன்ட்ரேன்செக்சன் நடப்பதாக தெரிவித்துள்ளார்.
இது வெறும் 9 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்தாக கூறியுள்ளார் இதன் மூலம் உலகிலே UPI பெமண்டான டிஜிட்டல் உலகத்தில் இந்தியா தான் முதல் இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதை அடுத்து மேலும் ஒரு தனி போஸ்ட்டில் ex-G20 Sherpa பிரதமர் நரேந்திர மோடியை டெக் செய்து இது ஒரு குறிப்பிட தக்க சாதனை என கூறியுள்ளார்.
ஆலோசனை நிறுவனமான PwC யின் அறிக்கை, கடந்த 12 ஆண்டுகளில் ரீடைலர் டிஜிட்டல் ட்ரேன்செக்சன் சுமார் 90 மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது. UPI யின் அம்சங்களை அதிகரிக்க NPCI திட்டமிட்டுள்ளது. UPI பரிவர்த்தனைகள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன – நபருக்கு நபர் (P2P) மற்றும் நபருக்கு பிஸ்னஸ் (P2M). NPCI UPIக்கு 20 முதல் 30 கோடி புதிய பயனர்களைச் சேர்க்க இலக்கு வைத்துள்ளது. இந்த கட்டண முறையின் ரீடைளர் பயனர்களின் எண்ணிக்கை 45 கோடிக்கும் அதிகமாகும்.
இதையும் படிங்க மழைக்காலத்தில் AC மற்றும் பிரிட்ஜ் போடும்போது இத நிச்சம் செய்துவிடுங்க இல்லை எனில் பெரிய ஆபத்து ஆகலாம்
UPI 2016 ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகமானது அதன் பிறகு மக்கள் பயன்பாட்டிற்காக (BHIM) app டிசம்பர் மாதம் 2016 அறிமுகம் செய்யப்பட்டது.