உங்கள் போனை தொலைச்சுட்டிங்களா அப்போ கூகுள் உங்களுக்கு கண்டுபிடுச்சு தரும்.

HIGHLIGHTS

இத்தகைய கிராமத்திலிருந்து விடைபெற கூகிள் உங்கள் தொலைந்த ஸ்மார்ட்போனைக் கண்டுபுடிக்க சில வழிமுறைகளை செய்துள்ளது .

நாம்  தினசரி வேலைகளில்  நமக்கு ஸ்மார்ட்போன்கள் மிகவும் முக்கியமானதாக  மாறியுள்ளது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த  ஸ்மார்ட்போன்கள் இன்றையகாலத்தில் பயன்படுத்தி வருகிறார்கள் மேலும்  வீட்டில் தவறுதலாய் எங்கேயோ வைத்து விட்டு தேடி வருவது இன்னும் பலர் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். இதனுடன் மேலும் சிலரது  போன்  பேருந்து அல்லது  நாம்  ஒரு இடத்திற்கு பயணம் செல்லும்பொழுது அங்கு நாம்  தெரியாமல் மிஸ் பண்ணி இருக்கலாம், இன்னும் சிலரது  ஸ்மார்ட்போன்கள் திருடபட்டும்  இருக்கலாம். 

இத்தகைய கிராமத்திலிருந்து விடைபெற கூகிள்  உங்கள் தொலைந்த ஸ்மார்ட்போனைக் கண்டுபுடிக்க சில வழிமுறைகளை செய்துள்ளது .

லொகேட் பட்டனைத் செலக்ட் செய்யுங்கள் அது கூகிள்  மேப்ஸ்க்கு சென்று உங்கள் ஸ்மார்ட் போன் தற்போது இருக்கும் coordinates ஐ கண்டுபிடிக்க உதவும் .

முதலாவதாக, டேட்டா கனெக்டிவிட்டியில் உள்ள உங்கள் ஸ்மார்ட்போனில் GPS (ஜிபிஎஸ்) ஆன் செய்து உங்களுக்கான கூகிள்  அக்கவுண்டில் சைன் இன் செய்ய வேண்டும்.

டெஸ்கடப்பிலிருந்து எப்படி தேடுவது 

  • உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள ஜிமெயிலில் உள்நுழைந்து முகப்புப்பக்கத்திற்குச் (Home page ) செல்லுங்கள்.
  • மேல் வலது மூலையில் உள்ள profile icon-க்கு செல்லவும்
  • கூகிள்   அக்கவுண்டைத் செலக்ட் செய்யவும்
  • இடது புறத்தில் லிஸ்டில் நான்காவதாக இருக்கும் பாதுகாப்பை(Security) செலக்ட் செய்யவும்.
  • உங்கள் சாதனங்கள் (My Device ) எனப்படும் பிரிவின் கீழ் இழந்த அல்லது திருடப்பட்ட போனை கண்டுபிடி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • நீங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கும் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும் (நீங்கள் இதுவரை எந்தெந்த சாதனங்களில் உங்கள் கூகிள்  அக்கவுண்ட் வைத்து சைன் இன் செய்துள்ளீர்களோ அந்த சாதனத்தின் லிஸ்டை நீங்கள் பார்த்திருப்பீர்கள்)
  • அதன் பிறகு உங்கள் ஜிமெயில்  பாஸ்வர்டை உங்களிடம் கேட்கும் ஆகையால் பதிவுசெய்யுங்கள்..

ஸ்மார்ட் போனில் இருந்து எப்படி கண்டு பிடிப்பது :

  • ஜிமெயில் செயலியைக் கிளிக் செய்யவும்
  • மற்றொருவர் போனிலிருந்து இந்த செயல்முறையை செய்தால் மற்றொரு அக்கவுண்டை சேர் என்ற பட்டனைத் தட்டவும் அல்லது உங்களுக்கு சொந்தமான இரண்டாவது போனிலிருந்து இந்த முயற்சியை செய்தால் கூகிள்  அக்கவுண்ட் நிர்வகி( Manage Google Account) என்பதைக் கிளிக் செய்யவும்
  • மேலே சென்று security என்பதைக் கிளிக் செய்க
  • உங்கள் சாதனங்களுக்குச் சென்று தொலைந்து போன அல்லது திருடப்பட்ட போனை கண்டுபிடி என்பதைத் செலக்ட் செய்யவும்.
  • உங்கள் சாதனத்தைத் செலக்ட் செய்யவும்
  • பின்பு உங்கள் ஜிமெயில்  பஸ்ஸ்வர்ட் உங்களிடம் கேட்க்கும் ஆகையால் பதிவுசெய்யுங்கள்.

நீங்கள் மொபைல் இருப்பிடத்திற்கு அருகில் இருந்தால், ப்ளே சவுண்டைக் கிளிக் செய்யுங்கள் , அதன் பிறகு கூகிள்   உங்கள் சாதனத்தை ஐந்து நிமிடங்களுக்கு சவுண்ட் வரும். அந்த  ஸ்மார்ட்போனை நீங்கள் சைலன்ட் மோடில் போட்டிருந்தாலும்  சவுண்ட் அப்பொழுதும் வரும், என்பது குறிப்பிடத் தக்கது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :