இனி Aadhaar Card டவுன்லோட் செய்ய எங்கும போக வேண்டாம் WhatsApp யில் ஈசியா செஞ்சிக்கலாம்

Updated on 21-Sep-2025

இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் (UIDAI) மூலம் ஆதார் கார்ட் (Aadhaar Card) ஒரு மிக முக்கியமான அடையாள அட்டயாகும் இது வெறும் அடையாள மட்டுமல்லாமல் எந்த ஒரு அரசு சார்ந்த வேலை ஆகினாலும் சரி, பேங்க் அக்கவுன்ட் மற்றும் சிம் வாங்கனுமான கூட ஆதார் கார்ட் மிக முக்கியமாகும் அதாவது இதுவரை வெறும் UIDAI யின் வெப்சைட் அல்லது mAadhaar ஆப் பயன்படுத்தி டிஜிட்டல் காப்பி டவுன்லோட் செய்து வாந்தால் அவர்களுக்கு இப்பொழுது புதிய வழிமுறை ஒன்னு கொண்டு வந்துள்ளது அதாவது நீங்கள் உங்கள் WhatsApp யில் எளிதாக டவுன்லோட் செய்யலாம் அதை எப்படி என முழுசா பாருங்க

இதையும் படிங்க 99 சதவிகிதம் இந்த சிம் விஷயத்தை பத்தி தெரிய வாய்ப்பே இல்லை அப்படி என்ன பாருங்க

WhatsApp யில் Aadhaar card எப்படி டவுன்லோட் செய்வது?

  • முதலில் நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் காண்டேக்டில் MyGov ஹெல்ப் கேர் நம்பரை +91-9013151515 சேமிக்க வேண்டும்.
  • உங்கள் போனில் வாட்ஸ்அப்பைத் திறந்து ஹாய் அல்லது நமஸ்தே என டைப் செய்து இந்த நம்பருக்கு அனுப்ப வேண்டும்.
  • இப்போது பதிலில் பல அரசு சேவைகளுக்கான விருப்பத்தைப் பெறலாம் .
  • பல்வேறு அரசு சேவைகளின் லிஸ்ட்டில் டிஜிட்டல் ஆதார் டவுன்லோட் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பின்னர் உங்கள் ஆதார் நம்பர் உள்ளிட்டு அதை சரிபார்க்க வேண்டும்.
  • பின்னர் உங்கள் ரெஜிஸ்ட்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும், அதை நீங்கள் போனில் உள்ளிட வேண்டும்.
  • வெரிபிகேஷன் முடிந்ததும், உங்கள் ஆதார் கார்ட் உங்கள் வாட்ஸ்அப் சேட்டில் PDF வடிவத்தில் கிடைக்கும். எதிர்கால பயன்பாட்டிற்காக நீங்கள் அதைப் டவுன்லோட் செய்யலாம் , அச்சிடலாம் அல்லது சேமிக்கலாம்.
  • வாட்ஸ்அப்பில் ஆதார் கார்டை டவுன்லோட் செய்வதன் நன்மைகள்

வாட்ஸ்அப்பில் ஆதார் கார்டை டவுன்லோட் செய்வது மிகப்பெரிய நன்மை என்னவென்றால், UIDAI-யின் வெப்சைட்டில் பார்வையிடவோ அல்லது எந்த லாகின் செய்ய நினைவில் கொள்ளவோ ​​தேவையில்லை. ஆதார் PDF-வாட்ஸ்அப்பில் மிக விரைவாக அக்சஸ் செய்ய முடியும். ஆப்கள் அல்லது வெப்சைட்களை பயன்படுத்துவதில் அதிக அறிவு இல்லாதவர்கள் எளிதாக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், OTP வெரிபிகேஷனுக்கு பிறகுதான் ஆதார் கார்டை டவுன்லோட் முடியும், எனவே இந்த முறையும் பாதுகாப்பானது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :