what is Blue Aadhaar Card and why it is important know the process to apply
இன்று நாடு முழுவதும் Aadhaar Card அடையாள அட்டையாக பயன்படுத்தப்படுகிறது. சிம் கார்டு எடுப்பதில் இருந்து கல்லூரி சேர்க்கை, பேங்க் அக்கவுன்ட் தொடங்குவது என அனைத்திலும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் நம்மிடம் இருக்கும் ஆதார் கார்ட் உண்மையா பொலிய என்பதை எப்படி அறிவது?
உதாரணமாக, நீங்கள் ஒரு வீட்டு உரிமையாளராக இருந்து, வாடகைதாரர் உங்கள் வீட்டிற்கு வந்து அவருடைய ஆதார் கார்டை அடையாளச் சான்றாகக் கொடுத்தால், அந்த ஆதார் உண்மையானதா இல்லையா என்பதை எப்படிச் சரிபார்க்கலாம்? ஆதார் கார்டை மிக எளிதாக அடையாளம் காணலாம். உங்கள் போனில் இருந்தும் இந்த வேலையைச் செய்யலாம். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதல் முறை QR கோட் ஸ்கேனர் மற்றும் இரண்டாவது UIDAI தளம்.
ஆதார் கார்டின் வலது பக்கத்தில் உள்ள அனைத்து ஆதார் கார்டிலும் QR கோட் உள்ளது. இந்த QR கோடை ஸ்கேன் செய்தால், ஆதார் குறித்த முழுமையான தகவல்கள் தெரியும். ஏதேனும் QR கோட் ஸ்கேனர் அல்லது கூகுள் லென்ஸ் ஆப் மூலம் ஆதார் கார்டின் QR கோர்டை ஸ்கேன் செய்யவும்.
QR கோட் வேலை செய்யவில்லை என்றால் அல்லது கோடை ஸ்கேன் செய்யும் போது காட்டப்படும் தகவல் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவலுடன் பொருந்தவில்லை என்றால், ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம். இது தவிர, அசல் ஆதார் கார்டில் ஹாலோகிராம் ஸ்டிக்கரும் உள்ளது.
இதையும் படிங்க:Samsung Galaxy A55 முழு டிசைன் தகவல் லீக்
ஆதார் வெப்சைட்டிற்கு சென்று, Verify ஆதார்என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும் அல்லது https://myaadhaar.uidai.gov.in/check-aadhaar-validity என்பதைக் கிளிக் செய்யவும், பின்னர் ஆதார் நம்பரையும் கேப்ட்சாவையும் உள்ளிட்டு சமர்ப்பிக்கவும். இதற்குப் பிறகு, ஆதார் கார்ட் வைத்திருப்பவரின் மொபைல் நம்பரில் மதிப்பிடப்பட்ட வயது, பாலினம், மாநிலம் மற்றும் கடைசி மூன்று இலக்கங்களைக் காண்பீர்கள். அதை ஆதாருடன் பொருத்துவதன் மூலம், அந்த ஆதார் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கண்டறியலாம்.