Haier Desert Rose
Haier இந்தியாவில் அதன் புதிய Desert Rose AC சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்பிளிட் ஏசி தொடரானது, செல்ப் -கிளீனிங் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது பராமரிப்புத் தேவையை நீக்கி, வீடு முழுவதும் சுத்தமான, குளிர்ச்சியான காற்றை உறுதிசெய்யும் வகையில், வெளிப்புறத்தில் தூய்மையான காற்றோட்டத்தை உறுதி செய்கிறது. இந்த ஏசியில் செல்ப் ஆட்டோ கிளீனிங் அவுட்டோர் கொண்ட இந்தியாவின் முதல் ஏசி ஆகும் மேலும் இந்த ஏசியில் இருக்கும் சுவாரஸ்யமான அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Haier Desert Rose சீரிஸ் யின் இந்த ஏசியில் AI-AtmoX டெக்நோலாஜி கொண்டுள்ளது.இந்தத் தொழில்நுட்பம் முதன்மையாக AI-AtmoX Neuro, AI-Power Manager மற்றும் AI-AtmoX Auto Clean ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையில் இயங்குகிறது. AI-AtmoX Neuro ஆனது AI Climate Control 2.0-ஐ அடிப்படையாகக் கொண்டது, இது பயனரின் தேவைகளுக்கு ஏற்ப ஏசியின் கூலிங் பவர் சரிசெய்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் காரணமாக, நீங்கள் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும்போது, உங்களிடமிருந்து 100 மீட்டர் தொலைவை அடைந்தவுடனேயே ஏசி இயங்கத் தொடங்கிவிடும்.
AI-AtmoX பவர் மேனேஜர் தொழில்நுட்பம் மின் கட்டணங்களைக் குறைக்க உதவுகிறது.அறை குளிர்ந்தவுடன் இது கம்ப்ரசரைத் தானாகவே அணைத்து, ஏசியின் சக்தியை நிர்வகிக்கிறது. AI-AtmoX ஆட்டோ கிளீன் அம்சம், வெளிப்புற மற்றும் உட்புறச் சூழல்களில் இருந்து தூசி மற்றும் அழுக்குகளை அகற்றி, ஏசியைத் தானாகவே சுத்தம் செய்வதால், ஏசி பராமரிப்புக்கான தேவை நீக்கப்படுகிறது..
இதையும் படிங்க“உங்களை குளு குளு என வைக்க TATA நிறுவனத்தின் பெஸ்ட் Portable AC கம்மி விலையில் வாங்க சரியான நேரம்
இந்த ஹையர் ஏசி சீரிஸ், ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) அம்சங்களுடன் வருகிறது. மேலும், இதில் மனிதர்களைக் கண்டறியும் வசதியும் உள்ளது. இதன் மூலம், ரூமில் யாரும் இல்லாத 15 நிமிடங்களுக்குள் ஆட்டோ L3 மோட் செயல்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, 30 நிமிடங்களுக்குப் பிறகு இது ஏசியின் மின்சாரத்தை அணைத்துவிடுகிறது. இதனால், ஏசி தற்செயலாக இயக்கப்பட்டாலும், அது மின்சாரத்தைப் பயன்படுத்தாது. மேலும், இந்த ஏசியை இயக்கிய 10 வினாடிகளுக்குள் குளிர் காற்றை வழங்கத் தொடங்கிவிடும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.
Haier யின் இந்த புதிய சீரிஸ் ரூ, 55,990 என்ற ஆரம்ப விலையில் வருகிறது. இது கோல்டு ஸ்ட்ரைப் மற்றும் நெபுலா ப்ளூ ஸ்ட்ரைப் என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இவை இந்தியாவில் இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் முன்னணி ரீடைளர் விற்பனை வழிகள் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கின்றன.