Indian government banned 16 youtube channels which showing misinformation against india
இந்திய அரசு அதிரடியாக இந்த 16 பாகிஸ்தான் YouTube சேனலை தடை செய்துள்ளது, அதாவது இது இந்தியாவிற்க்கு எதிராக தவறான கன்டென்ட் மற்றும் தகவலை பரப்புவதாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ANI தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட சேனல்களில்Dawn News, Samaa TV, ARY News, Geo News மற்றும் பல அடங்கும். இந்த சேனல்களுக்கான மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 63 மில்லியனுக்கும் அதிகமாகும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த துயரமான பயங்கரவாத சம்பவத்திற்குப் பிறகு, இந்த சேனல்கள் இந்தியா, அதன் ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத உணர்வுப்பூர்வமான கன்டென்ட் , தவறான மற்றும் தவறான கதைகளையும் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இதில் பல Youtube சேனல் தடை செய்யப்பட்டுள்ளது மேலும் இது எதுவரை தடை செய்யப்பட்டிருக்கும் என்பதை பற்றி தெரியவில்லை
இதோ இங்கே எந்த எந்த Pakistani YouTube சேனல்கள் எதையெல்லாம் தடை செய்யப்பட்டது
Total Subscribers: 63.08M
இந்த YouTube சேனல்களை யாராவது இப்போது அணுக முயற்சித்தால், அவர்கள் இந்த மெசேஜை பார்ப்பார்கள்:This content is currently unavailable in this country because of an order from the government related to national security or public order. For more details about government removal requests, please visit the Google Transparency Report (transparencyreport.google.com).”
(தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு தொடர்பான அரசாங்க உத்தரவின் காரணமாக இந்த உள்ளடக்கம் தற்போது இந்த நாட்டில் கிடைக்கவில்லை. மேலும் தகவலுக்கு கூகிள் வெளிப்படைத்தன்மை அறிக்கையைப் பார்க்கவும்.)
தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குடன் விளையாடும் எந்தவொரு செயலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க Amazon Great Summer Sale 2025: ஸ்மார்ட்போன் AC-கூலரில் அதிரடி டிஸ்கவுண்டில் வாங்கலாம்