Sanchar Saathi
இந்திய அரசு அதாவது தொலைதொடர்பு துறை (DoT) இனி வரும் புதிய போனில் கட்டாயமாக Sanchar Saathi app இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவு கொடுத்துள்ளது அதாவது எந்த புதிய மொபைல் போனையும் இந்தியாவுக்கு மேனுபெகஜர் கொண்டு வரும்முன் அல்லது இந்தியாவில் விற்பனை செய்யும் முன் இதை செய்து இருக்க வேண்டும் என என திகட் கிழமை அன்று புதிய விதியை விதித்துள்ளது.
அரசாங்கத்தின் சைபர் பாதுகாப்பு ஆப்பான சஞ்சார் சத்தி முன்பே ஏற்றப்பட்ட புதிய போன்களை விற்க அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆப் திருடப்பட்ட மொபைல் போன்களைக் கண்டறியவும், போலி IMEI எண்களை அடையாளம் காணவும், மோசடி கால்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் உங்களுக்கு வரும் கால் யாருடையது என்பதை அறிய முடியும்.
அரசின் படி இந்த ஆப்யின் உதவியால் உங்களின் தொலைந்த போனையும் தேட முடியும், மேலும் இந்த ஒரு புதிய விதி ஆப்பிள் போன்ற நிறுவனத்திற்க்கு பிடிக்கவில்லை, ஏன் என்றால் ஆப்பிளின் பாலிசி படி போனில் எந்த ஒரு ஆப்பையும் ப்ரீ லோடட் ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டு அனுப்புவதில்லை
இந்த புதிய விதியானது நவம்பர் 28 அரசு இந்தியாவில் விற்கப்படும் மற்றும் உருவாக்கப்படும் மொபைல் போனில் Sanchar Saathi ஆப் ஏற்கனவே போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என கட்டாயம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய விதியின் காரணம் தொடர்ந்து வரும் புகார்கள் குறைக்க என்பதாகும்.
இதையும் படிங்க:டிசம்பர் வந்தாச்சு இன்னும் Aadhaar உடன் PAN லிங்க் செய்யாமல் இருந்தால் இந்த தேதிக்குள் உடனே லிங்க் செய்து கொள்ளுங்கள்
அரசாங்கத்தின் கூற்றுப்படி, மொபைல் திருட்டு, போலி IMEI நம்பர்கள், மோசடி அழைப்புகள் மற்றும் சைபர் மோசடி போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த அரசாங்க ஆப் பயனர்கள் திருடப்பட்ட போனை தடுக்கவும், சந்தேகத்திற்கிடமான கால்களை புகாரளிக்கவும், IMEI செல்லுபடியாகுமா என்பதைச் சரிபார்க்கவும் அனுமதிக்கிறது.
மேலும் இந்த ஆண்டு ஜனவரி அறிமுகமாகிய போனிலிருந்து இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமான போனில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது, அரசின் கூற்றுப்படி இது வரை 3.7 மில்லியனுக்கு அதிகமான திருடப்பட்ட அல்லது தொலைந்து போன போனை ப்ளாக் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது