google remote
Google இப்போது தனது கூகிள் டிவி சாதனங்களுக்கு பேட்டரி தீர்ந்து போகாத ஒரு புதிய ரிமோட் அறிமுகப்படுத்துகிறது. இந்த டிவி ரிமோட் உட்புற லைட் பயன்படுத்துகிறது மற்றும் பேட்டரி ஒருபோதும் தீர்ந்து போகாது. தற்போது, கூகிள் டிவி ரிமோட்டுகள் பெரும்பாலும் பழைய AA அல்லது AAA பேட்டரிகளைப் பயன்படுத்துகின்றன, அவற்றை பயனர்கள் மாற்ற வேண்டும். பெரும்பாலான டிவி ரிமோட்டுகளில் இது இன்னும் ஸ்டேடர்டாக இருக்கிறது, ஆனால் எதிர்கால கூகிள் டிவிகளில் ஒருபோதும் பேட்டரி தீர்ந்து போகாத புதிய ரிமோட் இடம்பெறும்.
கூகுள் அதன் புதிய ஒரு டிவி ரிமோட் அறிமுகம் செய்தது, அதாவது இந்த ரிமோட்டில் அப்படி என்ன இருக்கிறது என கேட்டால் இது சோலார் பவர் மூலம் இயங்கும், இந்த புதிய சோலார் பவர்ட் ரிமோட் பெயர் G32 ஆகும்.மேலும் இந்த ரிமோட்டை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அதாவது பேட்டரி தீர்ந்து போகும் பயம் வேண்டாம் மற்றும் பேட்டரியை மாற்றவும் தேவை இல்லை, இதன் தொடர்பாக ஸ்வீடன் நிறுவனம் Epishine கூறியது என்னவென்றால், அதன் டெக்நோலஜியில் Google TV பிளாட்பாரம்க்காக உருவாக்கப்பட்ட புதிய ரெப்ரஸ் ரிமோட் பயன்படுத்தப்படுகிறது.
இதில் அதற்கு தேவையான லைட் எப்படி உருவாக்குகிறது என்றால் Epishine அதன் சோலார் செல்லை வீட்டில் இருக்கும் வெளுச்சத்தை பயன்படுத்தி உருவாக்குகிறது. இந்த சிறப்பு ரிமோட்டை கூகிளின் அதிகாரப்பூர்வ சப்ளையரான ஓசங் எலக்ட்ரானிக்ஸ் தயாரித்துள்ளது. இதன் இருபுறமும் ரிச்சார்ஜபிள் பேட்டரிக்கு சக்தி அளிக்கும் சோலார் செல் பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க Aadhaar யில் வந்த புதிய அப்டேட் இனி யாரும் உங்கள் தகவலை திருட முடியாது
கூகுள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு ரிமோட் வெளுச்சத்திளிருந்து ரீசார்ஜ் ஆகும் மற்றும் அதற்க்கு சூரிய ஒளி இருந்தால் மட்டுமே ரீசார்ஜ் ஆகும் என்பது இல்லை உங்கள் வீட்டில் எரியும் பல்பின் வெளுச்சத்தின் மூலம் ரீசார்ஜ் ஆகிவிடும் அறிக்கைகளின்படி, இந்த ரிமோட் ஒளியுடன் தொடர்பில் இருக்கும் வரை சார்ஜ் ஆகிக்கொண்டே இருக்கும்.
மேலும் நீங்கள் இருட்டான இடத்தில் அல்லது லைட் ஆப் செய்தாலோ சார்ஜ் ஆகுவது நின்றுவிடும், இதன் மூலம் உங்களின் ரிமோட் பேட்டரி தீர்ந்து போகும் பிரச்சனை இருக்காது.