(NHAI) தங்களின் வாடிக்கையாளரை அறிய (KYC) செய்யப்படாத FASTagகளை செயலிழக்கச் செய்வதாக அறிவித்துள்ளது,
FASTag என்பது வாகனங்களுக்கான ப்ரீ-பெய்டு டேக் ஆகும்
ஜனவரி 31 முதல் செயலிழக்கப்படும் என்று நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது
FASTag new rule
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) தங்களின் வாடிக்கையாளரை அறிய (KYC) செய்யப்படாத FASTagகளை செயலிழக்கச் செய்வதாக அறிவித்துள்ளது, இதற்கான டைம்லைன் ஜனவரி 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. One Vehicle, One FASTag” முயற்சியின் ஒரு பகுதியாகும், இது பல வாகனங்களுக்கு ஒரே ஃபாஸ்டாக்கைப் பயன்படுத்துவதை அகற்றுவதையோ அல்லது ஒரே வாகனத்தில் பல எலக்ட்ரோனிக் டோல் கலெக்சன் டூல்ஸ் இணைப்பதையோ நோக்கமாகக் கொண்டுள்ளது.
FASTag என்பது வாகனங்களுக்கான ப்ரீ-பெய்டு டேக் ஆகும், இது டோல் பிளாசாவில் பணம் செலுத்துவதன் மூலம் டோலைக் கடக்கும் தொந்தரவை நீக்குகிறது. இந்த டேக் வாகனத்தின் கண்ணாடியில் வைக்கப்பட்டுள்ளது, இது சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா அமைப்பு மூலம் கண்டறியப்பட்டு, அந்த வாகனத்தின் ஃபாஸ்டாக் உடன் இணைக்கப்பட்ட அக்கவுன்டிலிருந்து நேரடியாக கட்டணம் வசூலிக்கப்படும்.
FASTag
KYC இல்லாத FASTagகள் ஜனவரி 31 முதல் செயலிழக்கப்படும் என்று நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு ஜனவரி 31 என்றும், இது ‘ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டாக்’ முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தவிர, சிரமத்தைத் தவிர்க்க, பயனர்கள் தங்கள் சமீபத்திய FASTag இன் KYC முடிந்ததை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முந்தைய டேக்கில் கூறியபடி ஜனவரி 31, 2024க்குப் பிறகு செயலிழக்கப்படும்/தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும், மேலும் சமீபத்திய FASTag அக்கவுண்ட்கள் மட்டுமே செயலில் இருக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட வாகனத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட FASTagகள் வழங்கப்பட்டுள்ளது மற்றும் RBI உத்தரவை மீறி KYC இல்லாமல் FASTagகள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்ததும் இந்த முயற்சியை மேற்கொண்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
FASTags-sticker
சில நேரங்களில் வேண்டுமென்றே வாகனத்தின் கண்ணாடியில் ஃபாஸ்டாக் பொருத்தப்படுவதில்லை, இதனால் சுங்கச்சாவடிகளில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்றும் NHAI தெரிவித்துள்ளது.
FASTag என்றால் என்ன?
நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, FASTag என்பது வாகனங்களுக்கு முன்பணம் (prepaid)செலுத்தப்பட்ட டேக் ஆகும், இது டோல் பிளாசாவில் காத்திருக்காமல் உடனடியாக டோல் பிளாசாவை கடக்க அனுமதிக்கிறது. இந்த டேக் ரேடியோ-அதிர்வெண் அடையாளம் அல்லது RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன மற்றும் சுங்கக் கட்டணங்களைத் தானாகக் கழிப்பதைச் செயல்படுத்துகின்றன.
FASTags- என்றால் என்ன
FASTag யில் KYC எப்படி செய்வது?
1.முதலில் உங்களின் ரெஜிஸ்டர் செய்யப்பட மொபைல் நம்பரிலிருந்து https://fastag.ihmcl.com வெப்சைட்டுக்கு செல்லவும்
2.பிறகு உங்களின் மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வர்ட் போடவும் அல்லது OTP அடிப்படையிலான வேலிடேசன் செய்ய IHMCL கஸ்டமர் போர்டலை லோகின் செய்ய வேண்டும்.
3.லோகின் செய்த பிறகு, டாஷ்போர்டுக்குச் செல்லவும், அங்கு நீங்கள் “My Profile”” பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.உங்கள் FASTag யின் KYC ஸ்டேட்டசை இங்கே காண்பீர்கள்.
4.இப்பொழுது ப்ரோபைல் செக்சனில் KYC என்ற சப் பிரிவு உள்ளது, இது உங்கள் KYC ஐப் அப்டேட் விருப்பத்தை உங்களுக்கு வழங்கும்.
5.நீங்கள் தேவையான அடையாள மற்றும் முகவரி சான்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் வேறு சில தகவல்களை நிரப்ப வேண்டும். இங்கே நீங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை அப்லோட் செய்ய வேண்டும்.
6.இப்போது Submit என்பதைக் கிளிக் செய்வதற்கு முன், நிரப்பப்பட்ட தகவலைச் சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.
7.Proceed என்பதைக் கிளிக் செய்த பிறகு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் KYC வெரிபிகேசன் செயல்முறை முடிக்கப்படும்.
FASTag யின் வேலிடிட்டி என்ன ?
FASTag அன்லிமிடெட் வேலிடிட்டியாகும் டேக் வாசகரால் படிக்கப்படும் வரை அதே FASTag ஐப் பயன்படுத்தலாம் மற்றும் சேதமடையாது. தேய்மானம் மற்றும் வாசிப்புத் தரம் குறைவடைந்தால், புதிய தெகை உங்கள் வழங்கும் பேங்கை தொடர்பு கொள்ளவும்.
#FASTags-benifits
பாஸ்டாக்கில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் ?
FASTag ஆனது GST உடன் சர்விஸ் டேக் உட்பட ரூ,100 ஒருமுறை கட்டணம் வசுலிக்கப்படுகிறது,, இது ஒரு ரீபண்டபில் செக்யுரிட்டி டெபாசிட் ஆகும் இது உங்களின் வாகனத்தை பொருத்தது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.