இந்தியா பாக்கிஸ்தான் வெடிக்கும் மோதலின் காரணமாக தற்பொழுது சோசியல் மீடியா தளமான WhatsApp யில் வதந்தி அதி வேகமாக பரவி வருகிறது, அதில் நாடு முழுவதும் 2-3 நாட்களுக்கு ATM சேவையை மூடப்படும் என கூறப்பட்டுள்ளது இதனால் தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரல் மெசேஜில், “எல்லையில் நிலைமை சரியில்லை, எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்” என்ற செய்தி உட்பட, அச்சத்தை ஏற்படுத்தும் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீங்களும் இதுபோன்ற மெசேஜில் சிரமப்பட்டாலோ அல்லது உங்கள் குழுக்களில் ஏதேனும் இதைப் பார்த்திருந்தாலோ, இது முழுமையாக போலியானது என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்வோம். நாடு முழுவதும் ஏடிஎம்கள் மூடப்படுவதாக அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரப்பூர்வ நிறுவனமோ அத்தகைய எச்சரிக்கையை வெளியிடவில்லை.
PIB Fact Check யின் அறிக்கையின் மூலம் பரவி வரும் மெசேஜ் போலியானது என சைபர் எக்ஸ்பெர்ட் கூறியுள்ளார், இந்த வதந்தி ஏதோ தெரியாத மூலத்திலிருந்து பரவுகிறது, இதன் ஒரே நோக்கம் பீதியை பரப்புவதுதான். இதுபோன்ற ஃபார்வேர்டு மெசேஜை புறக்கணிப்பது மட்டுமல்லாமல், முடிந்தவரை அவற்றைப் புகாரளிக்கவும்.
ATM சேவையின் கீழ் எப்பொழுதும் போல சாதரணமாக இயங்கும் மற்றும் பேங்கில் எந்த ஒரு நிபந்தனை இல்லாமலா சாதரணமாக இயங்கும், இது போன்ற மெசேஜ் வரும்போது மக்களை கவனமாக இருப்பது நல்லது மேலும் மக்களிடத்தில் பீதியை உண்டாக்கும் எனவே இது போன்ற செய்தியை நம்ப வேண்டாம் மேலும் மக்கள் PIB Fact Check செய்வது நல்லது.
இதையும் படிங்க :Facebook-Insta, WhatsApp மற்றும் X யில் இந்தியா அதிரடி எச்சரிக்கை போலியான செய்தியை பகிர வேண்டாம் என அறிவுறுத்தியது
அதே போல சமிபத்தில் LPG,CNG,மற்றும் பெட்ரோல் கேஸ் பட்ரா குறை இருக்கும் எனவும் சமிபத்தில் ஒரு செய்தி பரவி வந்தது அதன் காரணமாக இந்தியன் ஆயில் நிறுவனம் , X யில் தனது பதிவின் மூலம், நாடு முழுவதும் போதுமான கேஸ் மற்றும் LPG இருப்புக்கள் இருப்பதாக தெளிவுபடுத்தியது. மேலும், நிறுவனத்தின் டெலிவரியும் வழிகளும் சீராக இயங்குகின்றன. பீதியில் வாங்க வேண்டிய அவசியமில்லை. என தெளிவாக தெரிவித்துள்ளது.
இதுபோன்ற செய்தியை நீங்கள் பெற்றால், பின்வருவனவற்றை மனதில் கொள்ளுங்கள்: