Budget 2026: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தனது ஒன்பதாவது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் , ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEகள்) மற்றும் கிரியேட்டர் தொழில்கள் போன்ற தொழில்நுட்பத் துறைகளில் கவனம் செலுத்துகிறது. தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேலும் வலுப்படுத்துவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026 பட்ஜெட்டில் , எலெக்ட்ரோனிக் அக்சஸ்ரிஸ் உற்பத்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு கிட்டத்தட்ட இரட்டிப்பாக ₹40,000 கோடியாக (தோராயமாக $1.5 பில்லியன்) உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இந்தத் திட்டத்திற்கான ஒதுக்கீடு ₹22,919 கோடி (தோராயமாக $1.5 பில்லியன்) ஆகும். இது நாட்டில் ஏலேக்த்ரோனிக் அக்சஸ்ரிஸ் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.
அரசாங்கம் “பாரத் விஸ்தார்” என்ற பன்மொழி, AI-இயங்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாய அறிவைக் கொண்டு செல்வதே இதன் குறிக்கோள். இந்த தளம் அரசாங்கத்தின் வேளாண் அடுக்கு போர்ட்டலை (டிஜிட்டல் விவசாயி பதிவுகளைக் கொண்டுள்ளது) இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) அறிவியல் ஆலோசனையுடன் இணைக்கும்.
2026 பட்ஜெட் டேட்டா சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை வலியுறுத்துகிறது. இந்த அமைப்புகள் நிகழ்நேர ஆலோசனைகள், பயிர் கண்காணிப்பு மற்றும் மகசூல் முன்னறிவிப்பை வழங்கும். இது விவசாயிகளுக்கு ஆபத்தை குறைக்கவும், உரம் மற்றும் நீர் பயன்பாட்டை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவும்.
‘லக்பதி தீதி’ திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் SHE-MART அறிமுகப்படுத்தப்பட்டது. இது விவசாயம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கான ஒரு தளமாகும். பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளைத் திறந்து, கிராமப்புற மதிப்புச் சங்கிலிகளை விரிவுபடுத்துவதே இதன் குறிக்கோள். இது பெண்கள் புதுமையான நிதியுதவி, பணி மூலதனம் மற்றும் திறன் மேம்பாட்டை அணுக உதவும்.
MSME துறையை ஆதரிக்க, (Self-Reliant India Fund) சுயசார்பு இந்தியா நிதியில் கூடுதலாக ₹4,000 கோடி சேர்க்கப்படும். இந்த நிதி 2023 இல் தொடங்கப்பட்டது மற்றும் சிறு தொழில்கள் பெரிய அலகுகளாக மாற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனிமேஷன், VFX, கேமிங் மற்றும் காமிக்ஸ் துறைகளுக்கு 20 லட்சம் நிபுணர்கள் தேவைப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதற்க்கு Indian Institute of Creative Technologies, Mumbai 15,000 பள்ளிகளிலும் 500 கல்லூரிகளிலும் AVGC ஆய்வகங்கள் நிறுவப்படும்.
டேட்டா செக்ட்டர் துறையை மேம்படுத்துவதற்காக, வெளிநாட்டு கிளவுட் சேவை நிறுவனங்கள் (Cloud Service Companies) இந்திய மறுவிற்பனையாளர்கள் மூலம் தங்கள் சேவைகளை வழங்கினால், 2047 வரை வரி விடுமுறையை அரசாங்கம் அறிவித்துள்ளது.