KYC Scam
உங்களுக்கு இது போன்ற ஒரு மெசேஜ் அதில் உங்கள் SIM மூடப்போகிறோம் என இறந்ததா அதாவது அந்த மெசேஜில் நீங்கள் KYC செய்யாத காரணத்தால் SIM மூடப்படும் என இருந்தால் எச்சரிக்கை அதாவது சமிப காலமாக BSNL அல்லது TRAI யின் பெயரில் இது போன்ற மெசேஜ் வந்தால் எச்சரிகையாக இருங்கள் இது ஒரு போலியான நோட்டிஸ் என்று கூறப்பட்டுள்ளது இதற்க்கு பதிலளித்த அச்சின் BSNL எந்த நோட்டிஸ் வெளியிடவில்லை இதனுடன் TRAIக்கும் இதில் எந்த சம்மதமும் இல்லை என பதிலளித்துள்ளது.
வைரலாகும் இந்த அறிவிப்பில் வலது பக்கத்தில் TRAI-யின் லோகோவும், நடுவில் BSNL- ன் லோகோவும் உள்ளன. இந்த அறிவிப்பில், TRAI-ஆல் KYC செய்யப்படாத காரணத்தால் , சிம் கார்டு 24 மணி நேரத்திற்குள் முடக்கப்படும் என்று மக்களுக்குச் சொல்லப்படுகிறது. மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி, அவசரமாக KYC வெரிபிகேசன் செய்ய கட்டாயப்படுத்துவதே இதன் நோக்கம், இதனால் மக்கள் எதையும் யோசிக்காமல் KYC சரிபார்க்கத் தொடங்கி, அவர்கள் பலியாக்கப்படுகிறார்கள். இந்த நோட்டிசின் வெரிபிகேசன் நிர்வாகியின் பெயர் மற்றும் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் மக்கள் இந்த நம்பரை நேரடியாக அழைக்க முடியும்.
PIB Fact Check யின் அதன் அதிகாரபூர்வ X (Twitter) பக்கத்தில் இந்த மெசேஜ் முழுக்க முழுக்க போலியானது மக்கள் இதை யாரும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.அந்த ட்வீட்டில், “கஸ்டமர் KYC @TRAI-ஆல், சிம் கார்டு 24 மணி நேரத்திற்குள் சஸ்பென்ட் செய்யப்படும் என்றும் கூறி BSNL-இலிருந்து ஒரு அறிவிப்பையும் நீங்கள் பெற்றுள்ளீர்களா? கவனமாக இருங்கள்! இந்த அறிவிப்பு #Fake.” என தில் கூபட்டுள்ளது.
அதன் பிறகு BSNL ஒரு போதும் இது போன்ற நோட்டிஸ் வெளியிடாது, எனவே தங்களின் தகவலோ அல்லது பேங்க் தகவலையும் எக்கரத்துகொண்டும் யாருடனும் ஷேர் செய்ய வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க இனி தட்கால் டிக்கெட் புக் செய்ய OTP அவசியம் புதிய விதிமுறை என்ன பாருங்க
PIB யில் மேலும் இது போன்ற போலி மெசேஜ் அனுப்பி மக்களை பயன்படுத்தி அவர்களின் தனிப்பட்ட தகவல் மற்றும் பேங்க் தகவலை திருடுவதே இதன் நோக்கம் ஆகும் அதாவது நீங்கள் அந்த நம்பரில் கால் செய்தல் மோசடிக்காரர்கள் உங்களின் மொபைல் நம்பரில் OTP வர வைத்து AADHAAR அல்லது அக்கவுண்ட் தகவலை தெரிந்து கொண்டு உங்களின் பணத்தை மோசடி செய்யலாம், மேலும் நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்களின் சிம் சஸ்பென்ட் ஆகிவிடும் என மிரட்டுவார்கள் எனவே இது போன்ற மெசேஜ் நம்ப வேண்டாம் என அரசு கேட்டு கொண்டுள்ளது.