Challan Scam 2025
Traffic Challan : பெங்களூருவைச் சேர்ந்த 42 வயது தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், தீங்கிழைக்கும் APK கோப்பைக் கிளிக் செய்த பிறகு, ‘போலி போக்குவரத்து சலான்’ மோசடியில் சிக்கி ₹ 70,000 இழந்தார் . தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள சிங்கசந்திராவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஹரி கிருஷ்ணன், இந்த சம்பவம் குறித்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டி போலீசில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்டவருக்கு ஜனவரி 19 அன்று 8318732950 என்ற நம்பரிலிருந்து போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி ஒரு WhatsApp மெசேஜ் வந்தது. அந்தச் மெசேஜில் , “உங்கள் வாகனப் போக்குவரத்து டிக்கெட் எண் KA46894230933070073” என்று ஒரு ரசீது இருந்தது, மேலும் அந்தச் மெசேஜில் வழங்கப்பட்ட லிங்க் வழியாக ‘வாகன் பரிவஹன்’ ஆப்பை டவுன்லோட் செய்து அபராதத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, இந்த மெசேஜ் பெரிய அளவில் உண்மையானதாகத் தோன்றியது, மேலும் அதில் ரசீது நம்பரும் சேர்க்கப்பட்திருந்தால் மோசடிகாரர் இந்த மெசேஜ் உண்மையான சலான் மெசேஜ் போலவே அனுப்பியுள்ளனர், இது பற்றி ஹரி கிருஷ்ணனால் ஒரு சிறிய சந்தேகம் வரவில்லை.
மேலும் அந்த லிங்கில் க்ளிக் செய்த பிறகு பில் ஆபத்தானது என்ற எச்சரிக்கை தோன்றியது அதையும் அவர் புர்த்படுத்தாமல் , கிருஷ்ணன் அதைப் இன்ஸ்டால் செய்ய தொடங்கினார். அதன் பிறகு அவர் போன் நம்பருக்கு பல OTP மெசேஜ் வர ஆரம்பித்தது. பின்னர் அவர் தனது கிரெடிட் கார்டிலிருந்து ஒரு இ-காமர்ஸ் தளத்திற்கு ₹ 70,000 மதிப்புள்ள அங்கீகரிக்கப்படாத ட்ரேன்செக்சன் செய்யப்பட்டதைக் கவனித்தார்.
கூடுதலாக, கிருஷ்ணனின் மனைவியின் சில நோட்டிபிகேசன் வர ஆரம்பித்தது அவரது மொபைல் நம்பரும் இணைக்கப்பட்டிருந்ததால், அவரது பேங்க் அக்கவுன்டிலிருந்து ட்ரேன்செக்சன் முயற்சிகள் குறித்த மெசேஜ்களை பெறத் தொடங்கினர். அதிர்ஷ்டவசமாக, மோசடி செய்பவர்களால் அவரது அக்கவுன்டிலிருந்து பணத்தை எடுக்க முடியவில்லை.
மோசடி நடந்ததை உணர்ந்த கிருஷ்ணன் உடனடியாக தனது பேங்க் தொடர்பு கொண்டு ட்ரேன்செக்சன் தடுக்க முயன்றார், அதே நாளில் சைபர் ஹெல்ப்லைனில் பிரச்சினையைப் புகாரளித்தார். ஜனவரி 29 அன்று, அவர் அதிகாரப்பூர்வமாக காவல்துறையில் புகார் அளித்தார். தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 318 (மோசடி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். தெரியாத மூலங்களிலிருந்து APK பைல்களையும் பதிவிறக்குவதைத் தவிர்க்குமாறும் அந்த அதிகாரி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் இனி நீங்க invite கொடுத்து பெசாலம்