Apple அதன் ஐந்தாவது கடையை இந்தியாவில் உத்தர் பிரதேஷ் யின் நொய்டாவில் DLF Mall யில் டிசம்பர் 11, பகல் 1 PM மணிக்கு திறக்க இருக்கிறது. அதாவது டெல்லியில் ஏற்கனவே சாகித் மாலில் Apple ஸ்டோர் திறக்கப்பட்ட நிலையில் இப்பொழுது உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டா பகுதியிலும் புதிய ஸ்டோர் திறக்க இருக்கிறது மேலும் இந்த புதிய ஆப்பிள் லோகோ மயில் போன்ற நிறத்தில் அழகாக காட்சியளிக்கிறது.
இந்த புதிய Apple ஸ்டோரில் கஸ்டமர்கள் லேட்டஸ்ட் கேட்ஜெட், போன் iphone 17 சீரிஸ், ஐபெட் ப்ரோ, மற்றும் மேக்புக் pro போன்றவற்றை வாங்கலாம். நொய்டா ஆப்பிள் ஸ்டோரில் நடைபெறும் “டுடே அட் ஆப்பிள்” அமர்வுகளிலும் மக்கள் பங்கேற்க முடியும். ஆப்பிளின் அனைத்து புதிய கேஜெட்களையும் இப்போது நொய்டாவில் உள்ள கடையில் பார்த்து வாங்கலாம்.
“இந்திய கஸ்டமர்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு ஒரு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று டெய்ட்ரே ஓ’பிரையன் கூறினார். புதிய கடை திறப்பு நொய்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இதையும் படிங்க:MOTOROLA என்றாலே தனி மவுசு தான் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,3000 டிஸ்கவுண்ட் Black friday Sale இன்று கடைசி
ஆப்பிளின் முதல் ஸ்டோர் 2023 அன்று திறக்கப்பட்டது, அது டெல்லி மற்றும் மும்பையில் திறக்கப்பட்டது அதன் பிறகு பூனே மற்றும் பெங்களூரு யில் திறக்கப்பட்டது அதன் பிறகு இப்பொழுது உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டா பகுதியில் திறக்க உள்ளார்கள். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 17 தொடரை வாங்க மும்பையின் பி.கே.சி.யில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் நீண்ட வரிசையில் மக்கள் காணப்பட்டனர். டெல்லி மற்றும் மும்பையைத் தவிர, பெங்களூரு மற்றும் புனேவிலும் ஆப்பிள் ஸ்டோர்களை நிறுவனம் திறந்துள்ளது.