ஆப்பிள் நிறுவனம் அதன் ஐமேக் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது

HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தனது ஐமேக் கம்ப்யூட்டர்களை சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கிராஃபிக்ஸ் உடன் அப்டேட் செய்திருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தனது ஐமேக் கம்ப்யூட்டர்களை சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கிராஃபிக்ஸ் உடன் அப்டேட் செய்திருக்கிறது. 

இதில் 21.5 இன்ச் ஐமேக் மாடலில் 8-ம் ஜெனரேஷன் குவாட்-கோர் 6-கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஐமேக் மாடல்களை விட 60 சதவிகிதம் வேகமாக இயங்கும். 27 இன்ச் ஐமேக் மாடலில் 9-ம் தலைமுறை 6-கோர் மற்றும் 8-கோர் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது.

27-இன்ச் ரெட்டினா 5K ஐமேக் மற்றும் 21.5 இன்ச் ரெட்டினா 4K ஐமேக் மாடல்களில் 500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் வைடு கலர் (P3) வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் 21.5 இன்ச் ஐமேக் மாடலில் ரேடியான் ப்ரோ வீகா 48 கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது 80 சதவிகிதம் வேகமான கிராஃபிக்ஸ் வழங்குகிறது. 27-இன்ச் ஐமேக் மற்றும் ரேடியான் ப்ரோ வீகா கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 50% வேகமாக இயங்குகிறது.

இந்தியாவில் 21.5 இன்ச் ஐமேக் மற்றும் ரெட்டினா 4K டிஸ்ப்ளே மாடல் விலை ரூ.1,19,900 என்றும் புதிய 27-இன்ச் ஐமேக் மற்றும் ரெட்டினா 5K டிஸ்ப்ளே மாடல் விலை ரூ.1,69,900 என வைக்கப்பட்டுள்ளது .

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :