AI Trend
சோசியல் மீடியா பக்கத்தில் AI ட்ரேன்ட் மோகம் அதிகரித்து வரும் நிலையில் பல போட்டோ வைரல் ஆகிவருவது நாம் தொடர்ந்து பார்க்க முடிகிறது முதலில் நேனோ பனான மிகவும் ட்ரேன்டிங் ஆகியதை தொதர்து தற்பொழுது Gemini AI Retro saree போட்டோ ட்ரெண்டின்ங் ஆகி வருகிறது ஆனால் ட்ரேண்டிங்கில் ஆபத்து அதிகம் இருக்கிறது ஆமாம் சமிப காலமாக பெண்கள் அவர்களின் போட்டோவை AI மூலம் வித விதமான புடவை போஸ் ஷேர் செய்து வருகிறார்கள் அதிலிருக்கும் ஆபத்து என்ன என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்.
ஒரு பெண், ஜெமினியுடன் தனக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவத்தை விவரிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். AI டூல்களை பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய ப்ரைவசி சிக்கல்கள் குறித்தும் அவர் மற்றவர்களை எச்சரித்தார்.
அதாவது அவரில் அந்த பேன் கூறியது என்னவென்றால் அவர் அந்த AI போட்டோ எடிட்டுக்காக முழு கை வைத்த சல்வார் சூட்டுடன் இருக்கும் போட்டோவை அப்லோட் செய்ததாகவும் மற்றும் மூலம் உருவாக்கிய சேலை ப்ரோமொப்ட் போட்டோவை உருவாக்கி கொடுத்தது, அதாவது அதில் கை இல்லாத பிளவுசுடன் உருவாகியது அதன் பிறகு அந்த AI வெர்சன் உருவாக்கியது அதை பார்த்து சந்தோசமடைந்து சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
ஆனால் அவரது மகிழ்ச்சி விரைவில் ‘பயங்கரமான’ உணர்வாக மாறியது. AI-உருவாக்கிய படத்தில் ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க விவரத்தை அவர் கவனித்தார். அவரது இடது கையில் ஒரு மச்சம் இருந்தது, அது அவர் பதிவேற்றிய அசல் புகைப்படத்தில் தெரியவில்லை. அவர் வீடியோவில், “எனக்கு உடலின் இந்த பகுதியில் ஒரு மச்சம் இருப்பதாக ஜெமினிக்கு எப்படித் தெரியும்? … இது மிகவும் பயமாக இருக்கிறது, மிகவும் பயமாக இருக்கிறது… நீங்களும் கவனமாக இருக்க வேண்டும்… சோசியல் மீடியா அல்லது AI தளங்களில் நீங்கள் பதிவேற்றும் விஷயங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறினார்.
இந்த கிளிப் வைரலாகி, ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. கமன்ட் செக்சனில் , பயனர்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் Gemini எவ்வாறு இவ்வளவு துல்லியமான விவரங்களை உருவாக்க முடிந்தது என்பது குறித்து ஊகித்தனர். ஒரு பயனர் விளக்கினார், “எல்லாம் இணைக்கப்பட்டுள்ளது, ஜெமினி கூகிளுக்கு சொந்தமானது, கூகிள் உங்கள் ஜிமெயில்-போட்டோக்களை -இயக்ககத்தில் சேமிக்கப்பட்ட அனைத்து போட்டோக்களையும் படிக்கிறது…”
இந்த விஷயத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, IPS அதிகாரி வி.சி. சஜ்ஜனார் தனிப்பட்ட தகவல்களை ஆன்லைனில் பகிர்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து கடுமையான எச்சரிக்கையையும் விடுத்தார். அவர் X யில் எழுதினார், “ஒரே ஒரு கிளிக்கில், உங்கள் பேங்க் அக்கவுன்ட்களில் உள்ள பணம் சைபர் கொள்ளையர்களிடம் விழக்கூடும்… போலி வெப்சைட் அல்லது அங்கீகரிக்கப்படாத செயலிகளுடன் போட்டோக்கள் அல்லது தனிப்பட்ட விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம்.”
இதையும் படிங்க Vintage saree photo:வைரல் சாரி ட்ரெண்டின்ங் போட்டோவில் தேவதை போல எப்படி தெரிவது?
மேலும் பைனான்ஸ் மினிஸ்டர் கூறுகையில் ஒரு போட்டோ அப்லோட் செய்வதுடன் அந்த போன்ட்டோ எங்கு சேர்கிறது என்ற கண்ட்ரோல் முடிந்து விடுகிறது கூடவே நாம் டெலிட் ஆகி விட்டதாக என்னும் போட்டோ டெலிட் ஆகுவதில்லை அது அவர்களிடம் சேமிப்பாக இருக்கும் மற்றும் அதை எப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என்பதை பற்றி யாருக்கும் தெரியாது.