இந்திய நாட்டை சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் துபாய் நாட்டில் இவர் வசித்து வருகிறார் இவருக்கு 13 வயது தான் ஆகிறது ஆனால் இவர் இந்த சிறு வயதிலே இவ்வளவு புத்திசாலியாக இருப்பது அனைவரையும் ஆச்சர்யம் பட வைத்துள்ளது. துள்ளி விளையாடும் வயதில் இவர் சொப்ட்வர் நிறுவனம் ஆரம்பித்தது உள்ளார் என்பது நம்மை திரும்பி வைக்க வைத்துள்ளார் இதனுடன் இவரது நிறுவனத்தில் மூன்று பேர் தற்போது வேலை செய்து வருகின்றன ் .
இந்த மூன்று வேலையாட்களும் ஆதித்யனுடன் பள்ளியில் படிக்கும் நண்பர்கள்.தற்சமயம் நிறுவனங்களுக்கு வெப்சைட் உருவாக்கி தரும் டிரைநென்ட் சொல்யூஷன்ஸ் அவர்கள் செய்யும் எந்த வேலைக்கும் கட்டணம் வசூலிப்பதில்லை.
ஆதித்யன் ராஜேஷ் தனது ஐந்து வயதில் கம்ப்யூட்டர் பயன்படுத்த துவங்கியதே, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு பயிலும் வயதிலேயே கம்பியூட்டர் மீது ஆர்வம் அதிகரிக்க தனது ஒன்பதாவது வயதில் மொபைல் ஆப் ஒன்றை வெளியிட்டான்.
வீட்டில் போரடிக்கும் நேரத்தில் தனது முதல் ஆப் உருவாக்கிய ஆதித்யன், அதன் பின் நிறுவனங்களுக்கு லோகோ மற்றும் வெப்சைட்களை உருவாக்கி கொடுக்க ஆரம்பித்தார். கேரளாவின் திருவில்லாவில் பிறந்த ஆதித்யன் தனது ஐந்து வயதில் துபாய் நாட்டிற்கு வந்தான் .
நிறுவனத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய ஆதித்யன் 18 வயது வரை காத்திருக்க வேண்டும். எனினும், ஏற்கனவே டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்களை போன்று இயங்கி வருகிறது. இதுவரை 12 நிறுவனங்களுக்கு டிரைநெட் சொல்யூஷன்ஸ் சார்பில் வடிவமைப்பு மற்றும் குறியீடு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 7, 2017ம் ஆண்டில் டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்சமயம் ஏழாம் வகுப்பு பயிலும் ஆதித்யனுடன் டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 11 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்சமயம் ஆதித்யன் தனது பள்ளி ஆசிரியர்களுக்காக பிரத்யேக ஆப் ஒன்றை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளான். இந்த ஆப் ஆசிரியர்களின் வேலையே பாதியாக குறைக்கும் அம்சங்களை கொண்டிருக்கும் என ஆதித்யன் தெரிவித்திருக்கிறான். சொப்ட்வர் நிறுவனம் தவிர யூடியூப் சேனல் மூலம் தனக்கு தெரிந்த தகவல்களை ஆதித்யன் வீடியோ மூலம் ஷேர் செய்து வருகிறார்.