boAt Airdopes Prime 701 ANC இயர்பட்ஸ் அறிமுகம் 50 மணி நேரம் வரை பேட்டரி லைப் நீடிக்கும்

Updated on 24-Jun-2025
HIGHLIGHTS

boAt இந்திய சந்தையில் அதன் புதிய இயர்பட்ஸ் boAt Airdopes Prime 701 ANC அறிமுகம் செய்தது

Airdopes Prime 701 ANC யில் 10mm டிரைவர் இருக்கிறது

boAt Airdopes Prime 701 ANC விலை ரூ.1,999 . இயர்பட்கள் ஜிங்க் ஒயிட், அப்சிடியன் கிரே மற்றும் டைட்டானியம் ப்ளூ கலர்களில் கிடைக்கின்றன

boAt இந்திய சந்தையில் அதன் புதிய இயர்பட்ஸ் boAt Airdopes Prime 701 ANC அறிமுகம் செய்தது, இதை சிறப்பு பில்ட் இந்தியா டிசைன் உடன் வருகிறது, Airdopes Prime 701 ANC யில் 10mm டிரைவர் இருக்கிறது மேலும் இந்த இயர்பட்ஸ் 5.2 யின் ப்ளுடூத் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதன் விலை மற்றும் இதன் சுவாரஸ்யமான அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

boAt Airdopes Prime 701 ANC விலை

boAt Airdopes Prime 701 ANC விலை ரூ.1,999 . இந்த இயர்பட்கள் ஜிங்க் ஒயிட், அப்சிடியன் கிரே மற்றும் டைட்டானியம் ப்ளூ கலர்களில் கிடைக்கின்றன. இந்த இயர்பட்களுக்கு நிறுவனம் 1 வருட வாராண்டி வழங்குகிறது. இயர்பட்களை இ-காமர்ஸ் தளமான அமேசான் மற்றும் போட் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இருந்து வாங்கலாம்.

boAt Airdopes Prime 701 ANC சிறப்பம்சம்.

boAt Airdopes Prime 701 ANC யில் 10mm டிரைவர் இருக்கிறது, டிசைன் அடிபடையின் கீழ் இது இதில் எகொநோமிக் இன் இயர் காம்பேக்ட் மற்றும் காம்பேக்ட் டிசைன் இருக்கிறது, இதில் 24-bit போட் ஸ்பெசியல் ஆடியோ சப்போர்ட் வழங்குகிறது இது Bluetooth v5.2 ஐ ஆதரிக்கிறது. சத்தம் ரத்து செய்வதற்கு 46dB வரை ஹைப்ரிட் ANC ஆதரவு கிடைக்கிறது. AI ENx தொழில்நுட்பத்துடன் 4 மைக்ரோஃபோன்கள் உள்ளன. இயர்பட்கள் நீர் பாதுகாப்பிற்காக IPX5 ரேட்டிங்க கொண்டுள்ளன.

இதையும் படிங்க iPhone 16e யில் அதிரடியாக ரூ,9,000 வரை டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் ஐபோன் வாங்க சரியான நேரம்

பேட்டரி பேக்கப் பற்றி பேசுகையில், Airdopes Prime 701 ANC கேஸில் 500mAh பேட்டரி உள்ளது மற்றும் பட்ஸ் 35mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 மணிநேரம் வரை நீடிக்கும். அதே நேரத்தில், 10 நிமிடங்கள் சார்ஜ் செய்த பிறகு 180 நிமிடங்கள் ப்லேபேக் நேரம் கிடைக்கிறது. கேமிங் மோடில் 60ms குறைந்த தாமதம் (BEAST மோட் ) அடங்கும். மற்ற அம்சங்களில் in-ear கண்டறிதல், மல்டிபாயிண்ட் இணைப்பு, அடாப்டிவ் EQ (மிமீ-பவர்டு) மற்றும் கூகிள் ஃபாஸ்ட் பேர் ஆகியவை அடங்கும். இயர்பட்கள் Boat hearables உடன் இணக்கமாக உள்ளன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :