arattai
இந்தியாவில் WhatsApp போட்டியாக Arattai ஆப் அறிமுகம் செய்யப்பட்டது, சமீபத்தில் அதிக டவுன்லோட் செய்யப்பட்டு பிரபலமடைந்து வருகிறது. இருப்பினும், Zoho தளத்தில் அரட்டைகளுக்கு முழுமையான E2E இல்லாமல் இருந்தது, இதனால் ப்ரைவசி விரும்பும் பயனர்களுக்கு இது அவசியமானது என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்போது, ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, E2E இறுதியாக அரட்டைக்கு வருவதாக அறிவித்துள்ளார், இதற்கு பயனர்களிடமிருந்து சில முயற்சிகள் தேவைப்படும். எனவே இப்பொழுது அதாவது உங்களின் சேட்டை பாதுகாப்பாக எண்டு டு எண்டு என்கரிப்ஷன் செய்யப்படும் இதை பற்றி முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
Zoho ஓனர் ஆன ஸ்ரீதர் வேம்பு இனி உங்கள் chat பாதுகாப்பாக இருக்கும் என E2E பற்றி தெரிவித்துள்ளார் அதாவது அவரது X பக்கத்தில் செவ்வாய்கிழமை இரவு முதல் ஆரம்பமாகும் என்று தெரவித்துள்ளார் மேலும் நீங்கள் இந்த ஆப்பை உங்களின் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து அப்டேட் செய்யலாம் .
அனுப்புநர் மற்றும் பெறுநரைத் தவிர வேறு யாரும் மெசேஜ்களை பார்க்கமுடியாது மேலும் அந்த நிறுவனமே அதை அக்சஸ் செய்ய முடியாது என்பதை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் உறுதி செய்கிறது. வாட்ஸ்அப் போன்ற தளங்கள் ஏற்கனவே அனைத்து சேட்களுக்கும் E2E சப்போர்ட் செய்கிறது. ஸ்ரீதர் வேம்புவின் கூற்றுப்படி, தனிப்பட்ட சேட் களுக்கான E2E சப்போர்ட்டை பெற பயனர்கள் அரட்டையின் சமீபத்திய வெர்சனை பயன்படுத்த வேண்டும். நீங்கள் அரட்டையின் சமீபத்திய வெர்சனில் இருந்தால், உங்கள் காண்டேக்ட அந்தத் காண்டேக்த்கள் மட்டுமே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட செட்களை பயன்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதையும் படிங்க:POCO யின் இந்த போனில் வேற லெவல் ஆபர் வெறும் ரூ,4,999 யில் ஸ்மார்ட்போன்
இந்த லேட்டஸ்ட் E2E என்கரிப்ஷன் நன்மையை பெற அனுப்புனர் மற்றும் பெறுனர் இருவரும் சமிபத்திய லேட்டஸ்ட் வெர்சனில் அப்டேட் செய்து இருக்க வேண்டும் மேலும் இந்த நீங்கள் Google play store அல்லது ஆப் store சென்று அப்டேட் செய்வதன் மூலம் உங்களுக்கு இந்த எண்டு-டு-எண்டு என்கரிப்ஷன் அம்சம் பெறலாம் அதாவது உங்கள் சேட் பாதுகாப்பாக அனுப்பனர் மற்றும் பெருனரே படிக்க முடியும் மேலும் இந்த அம்சத்தை அப்டேட் செய்தவர் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.
அரட்டையின் பழைய பதிப்புகளைக் கொண்ட தொடர்புகள் இன்னும் தங்கள் அரட்டைகளைத் தொடரலாம், ஆனால் இந்த அம்சம் மூன்று நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதன் பிறகு, அவர்கள் செயலியைப் புதுப்பிக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பிறகு, அனைத்து பயனர்களும் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்படுவார்கள், மேலும் அனைவருக்கும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் தேவைப்படும்.
WhatsAppக்கு போட்டியாக வந்த அரட்டையின் ஆப்யில் எண்டு-டு-எண்டு என்கரிப்ஷன் E2E வழங்கப்பட்டுள்ளது ஆனால், ட் இது தற்பொழுது க்ரூப் சேட்டுக்கு கிடைக்காது அதாவது இந்த அப்டேட் குருப்பில் பெற ஒரு சில கால அவகாசம் தேவைப்படலாம் ஆனால் அதும் விரைவில் கிடைக்கப்படும் மேலும் இந்த அரட்டை ஆப்யில் பல மிக சிறந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இந்த அம்சத்தின் மூலம் மேலும் அதிகபட்சமான டவுன்லோட் பெறலாம் மேலும் யாரோ ஒரு நாட்டின் ஆப்பை பயன்படுத்துவதை விட நம் தமிழா உருவாக்கிய அரட்டை ஆப பயன்படுத்துவது மிகவும் பெருமையே