WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் இனி நீங்க invite கொடுத்து பெசாலம்

Updated on 05-Feb-2025

ஆண்ட்ராய்டு மற்றும் iOSக்கான WhatsApp பீட்டா வெர்சனில் புதிய அம்சங்கள் ஒன்றன் பின் ஒன்றாக காணப்படுகின்றன. மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளம் பல அக்கவுன்ட் அம்சத்தில் செயல்படுகிறது என்பது சமீபத்தில் தெரியவந்தது. இப்போது, ​​​​ஒரு புதிய அம்சம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது, இது ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்சனில் காணப்பட்டது.

தனிப்பட்ட சேட்கள் Event உருவாக்கும் அம்சத்தில் பிளாட்பாரம் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த அம்சம் வெளியிடப்பட்டால், பயனர்கள் எந்த சேட்டுக்கு நிகழ்வுகளை உருவாக்க முடியும், இது இதுவரை க்ரூப் அல்லது community மட்டுமே இருந்தது . புதிய அம்சத்தில், தனிப்பட்ட செட்டில் இன்வைட் உருவாக்கலாம் அல்லது அதற்கான ரிமைன்டர் அமைக்கலாம்.

WhatsApp யில் Chat event அம்சம்

வாட்ஸ்அப் ஃபீச்சர் டிராக்கரான WaBetaInfo ஆனது ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்சன் 2.25.3.6 யில் புதிய அம்சத்தைக் கண்டறிந்துள்ளது. இது நிகழ்வு அம்சமாகும், இது தனிப்பட்ட செட்களின் செயல்படுகிறது. முன்னதாக, நிகழ்வுகளை க்ரூப்கள் அல்லது Community மட்டுமே உருவாக்க முடியும். புதிய வேர்சனின், இந்த அம்சம் தனிப்பட்ட சேட்டுக்கு காணப்பட்டது. இங்கும் பயனர்கள் இன்வைட் உருவாக்கலாம், அதற்கான தேதி அல்லது நேரத்தை அமைக்கலாம், ரிமைன்டர் அமைக்கலாம் என அறிக்கை கூறுகிறது.

WhatsApp Chat events

இந்த அம்சம் சில பீட்டா டெஸ்டர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்டையும் டிராக்கர் பகிர்ந்துள்ளார். சேட் லிஸ்ட்டின் பக்கவாட்டில் உள்ள லிங்க் பட்டனை தட்டுவதன் மூலம் இதைப் பார்க்கலாம். இன்வைட் இடத்தையும் அமைக்கலாம். இது தவிர, வொயிஸ் அல்லது வீடியோ காலுக்கு லிங்கை அமைக்கலாம்.

இது தவிர, வாட்ஸ்அப் அதன் iOS செயலியை ஒரேடிவைசில் பல அக்கவுண்ட்களை கட்டுப்படுத்த அனுமதிப்பதில் செயல்பட்டு வருவதாகவும் அதே டிராக்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இது பல அக்கவுண்ட்களை வைத்திருக்கும் பயனர்களுக்கும், அவற்றை நிர்வகிக்க பல சாதனங்களை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிக்கும். இது மெட்டாவின் இன்ஸ்டாகிராமைப் போலவே இருக்கலாம், அங்கு பயனர்கள் ‘Change Account’ அம்சத்தின் மூலம் ஒரே கிளிக்கில் தங்கள் மற்றொரு அக்கவுண்டில் லாகின் செய்யலாம்.

இதையும் படிங்க Nothing Phone (3a) போன் இந்த தேதியில் அறிமுகமாகும் மற்றும் பல தகவல் லீக்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :