ஹேக்கிங் பத்தி நாங்க மே மாதமே அரசுக்கு சொல்லிட்டோம். புது விளக்கம் கொடுத்த வாட்ஸ்அப் .

சமீபத்தில் வாட்ஸ்அப்  ஹேக்  செய்யப்பட்டுள்ளதை பற்றி மிக பரபரப்பாக  பேசப்பட்டு வந்தது. அந்த வகையில் .இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதில் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட தகவல்களை கடந்த மே மாதமே மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்திய சைபர் தாக்குதல் தடுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி.-விடம் உளவு பார்க்கப்பட்ட தகவல்களை கூறியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் ‘பெகாசஸ்’ என்ற சாப்ட்வெர் மூலம் உளவு பார்க்கப்பட்டதையோ, எந்த வகையில் தகவல்கள் திருடப்பட்டன என்பது பற்றியோ அதில் கூறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் தனி நபர்களுக்கு வரும் தகவல்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை தருவோம் என்று உறுதி அளித்துள்ளது.

அனைத்து பயனாளர்களின் தகவல்களையும் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது" என வாட்ஸ்அப் மெசேஜ்  தொடர்பாளர் தெரிவித்தார்."குடிமக்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற இந்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். சைபர் தாக்குதல் நிகழ்த்தியவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எசுக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் 20 நாடுகளில் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உளவு பார்த்தது தெரிந்த உடனேயே அந்த சாப்ட்வெர் தயாரித்த NSO . நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :