இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் Whatsapp பயனர்களுக்கு பல புதிய வசதிகளை கொண்டு வருகிறது
வாட்ஸ்அப் மற்றொரு புதிய அம்சமான பிக்சர்-இன்-பிக்சர் மோட் வெளியிட்டுள்ளது
வாட்ஸ்அப் சமீபத்தில் ஒரே நேரத்தில் 100 பைல்களை பகிரும் வசதியை பயனர்களுக்கு வழங்கியுள்ளது.
இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் Whatsapp பயனர்களுக்கு பல புதிய வசதிகளை கொண்டு வருகிறது.அதே போல் பல மாற்றங்களையும் கொண்டு வருகிறது. இந்த எபிசோடில், வாட்ஸ்அப் மற்றொரு புதிய அம்சமான பிக்சர்-இன்-பிக்சர் மோட் வெளியிட்டுள்ளது. புதிய PiP மோட் யின் உதவியுடன், பயனர்கள் வீடியோ அழைப்பின் போது கூட பிற பயன்பாடுகளைப் பயன்படுத்த முடியும். இந்த அம்சம் முதலில் Android பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. இப்போது நிறுவனம் இந்த அம்சத்தை iOS க்கும் வெளியிடுகிறது. PiP மோடானது iOS பயனர்கள் ஒரே நேரத்தில் WhatsApp வீடியோ அழைப்பின் போது மற்ற பயன்பாடுகளைத் திறந்து பயன்படுத்த அனுமதிக்கும். வாட்ஸ்அப் சமீபத்தில் ஒரே நேரத்தில் 100 பைல்களை பகிரும் வசதியை பயனர்களுக்கு வழங்கியுள்ளது.
பிக்ஜர் இன் பிக்ஜர் மோட்.
வீடியோ காலின் போது WhatsApp செயலியிலிருந்து வெளியேறினால், PiP மோடி தானாகவே செயல்படுத்தப்படும். எளிமையாகச் சொன்னால், இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் வீடியோ காலின் போது கூட மல்டிடாஸ்கிங் செய்ய முடியும். வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ காலிங் டிஸ்பிலேவை இடைநிறுத்தும் அல்லது மறைக்கும் வசதியையும் பெறுவார்கள். இதுவரை உங்களால் உங்கள் மொபைலில் PiP மோடி பயன்படுத்த முடியவில்லை என்றால், உங்கள் WhatsApp ஐப் புதுப்பிக்கவும் அல்லது தேவையான அனைத்து அமைப்புகளையும் சரிபார்த்து தேவையான அனுமதிகளை இயக்கவும்.
புதிய அப்டேட் அறிமுகமானது.
IOS பயனர்களுக்கு whatsapp லேட்டஸ்ட் அப்டேட் வெர்சன் 23.3.77 வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது, இப்போது iOS பயனர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதைத் தெரிவிக்கவும். வாட்ஸ்அப் கடந்த ஆண்டு முதல் PiP மோடில் செயல்பட்டு டிசம்பரில் சோதனை செய்யத் தொடங்கியது.
ஒரே நேரத்தில் 100 பைல் அனுப்பலாம்.
வாட்ஸ்அப்பின் புதிய அம்சத்தின் உதவியுடன், இப்போது 100 கோப்புகளையும் ஒரே நேரத்தில் அனுப்ப முடியும். உங்கள் தகவலுக்கு, முன்பு ஒரே நேரத்தில் 30 கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும். இந்த அம்சத்தில் பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் ஆவணங்களை அனுப்பும் வசதியைப் பெறுவார்கள்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.