WhatsApp யில் வருகிறது அசத்தலான AI அம்சம் ஒரே நேரத்தில் பல மெசேஜ் படிக்க முடியும்

Updated on 26-Jun-2025

WhatsApp அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சம் கொண்டு வந்துள்ளது, அதாவது மெட்டா வின் மக்களுக்கு பிரியமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளத்தில் அதன் கஸ்டமர்களுக்கு புதிய ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) பவர்ட் அம்சம் அறிமுகம் செய்துள்ளது. இது பயனர்களுக்கு பல மேசெஜ்களின் சுருக்கத்தை வழங்கும். இதன் பொருள் இப்போது பயனர்கள் ஒவ்வொரு மெசேஜையும் ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டியதில்லை. அவர்கள் ஒரு ஷோர்ட் மூலம் பல மேசெஜ்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த அம்சத்தின் பெயர் Message Summaries . மெட்டா AI ஐப் பயன்படுத்தி ஒரு சுருக்கத்தை வழங்குவதன் மூலம் பயனர்களுக்கு Unread Messages” விரைவாகப் படிக்க இது உதவுகிறது. மெட்டாவின் கூற்றுப்படி, இந்த அம்சம் தனியார் செயலாக்கம் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை மட்டும் முன்னிலைப்படுத்த பயனர்கள் மேம்பட்ட சேட் ப்ரைவசியை பயன்படுத்தலாம். மேலும் இதன் அம்சங்கள் தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

WhatsApp யின் இந்த அம்சம் யாருக்கு கிடைக்கும்?

தற்பொழுது இந்த அம்சமானது அமெரிக்காவில் ஆங்கில மொழியிலிருந்து ஆரம்பிக்கிறது, மற்றும் நிறுவனம் விரைவில் அனைத்து மொழிகளிலும் கொண்டு வரும் இதன் மூலம் நீங்கள் எளிதாக அன்ரீட் மெசேஜை படிக்க முடியும்

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்?

மெட்டாவின் தனியார் செயலாக்க உள்கட்டமைப்பு Trusted Execution Environment (TEE) எனப்படும் சிறப்பு பாதுகாப்பு மாதிரியில் செயல்படுகிறது என்று கூறுகிறது. இது மூன்று லேயர் பாதுகாப்பை வழங்குகிறது:

Confidential Processing: நீங்கள் AI உடன் சேட் செய்யும்போது , ​​உங்கள் டேட்டா வேறு யாருக்கும் செல்லாது, மெட்டாவிற்கு கூட செல்லாது. எல்லாம் ஒரு தனியார் கிளவுட்டில் நடக்கும்.

Enforceable Guarantees: இந்த பாதுகாப்பான ப்ரோசெசிங் யாராவது தலையிட்டால், முழு அமைப்பும் மூடப்படும் அல்லது பொதுவில் கண்காணிக்கப்படும்.

Verifiable Transparency:பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயனர்கள் மெட்டா சொல்வது உண்மையா என்பதை உறுதிப்படுத்த சிஸ்டம் தணிக்கை செய்யலாம்.

இதையும் படிங்க Vodafone Idea செம்ம பிளான் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை

இது தவிர, பயனர்கள் இப்போது அப்டேட் செய்யப்பட்ட சேட் ப்ரைவசி பயன்படுத்தி, அவர்கள் பார்க்க விரும்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜ்களை மட்டும் முன்னிலைப்படுத்தலாம் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதாவது, இந்த AI உங்கள் மீது எதையும் திணிக்காது.

WhatsApp யின் இந்த அம்சத்தின் சிறப்பு என்ன?

இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறித்து வாட்ஸ்அப் தனது வெப் போஸ்ட்டில் மூலம் தெரிவித்துள்ளது . அனைவரும் சில நேரங்களில் மீட்டிங் இடையில் அவசரமாக இருப்பார்கள், விமானப் பயணத்திற்குப் பிறகு வைஃபை இல்லாமல் அரட்டை அடிப்பார்கள் அல்லது நிறைய அரட்டை அடிப்பார்கள் என்று நிறுவனம் வலைப்பதிவு இடுகையில் எழுதியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், சில நேரங்களில் மக்கள் செய்தியை விரைவாகப் படிக்க வேண்டியிருக்கும். இந்த காரணத்திற்காக, செய்தி சுருக்கங்கள் அம்சத்தைப் பற்றி நிறுவனம் உற்சாகமாக உள்ளது. இது மெட்டா AI ஐப் பயன்படுத்தி செட்டில் படிக்காத மெசேஜ்களை தனிப்பட்டதாகவும் விரைவாகவும் சுருக்கமாகக் கூறுகிறது, இதனால் பயனர்கள் தங்கள் படிக்காத மெசேஜ்களை முழுமையாகப் படிக்காமல் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :