Whatsapp யில் பேமண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது முழு தகவல் இதோ.

Whatsapp யில்  பேமண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது  முழு தகவல் இதோ.
HIGHLIGHTS

Payment சேவையை முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் வெளியிட துவங்கியுள்ளது.

வாட்ஸ்அப் செயலியை சுமார் 12 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்

வாட்ஸ்அப் நிறுவனம் நீண்ட நாட்களாக சோதனை செய்து வந்த பேமண்ட் சேவையை முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் வெளியிட துவங்கியுள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப் சாட் செய்தபடி தனிநபர் மற்றும் உள்ளூர் வியாபாரங்களுக்கு பணம் அனுப்பலாம்.

அந்த வகையில் வாட்ஸ்அப் மூலம் நேரடியாக பணம் செலுத்தும் வசதியை பெற்ற முதல் நாடாக பிரேசில் இருக்கிறது. பிரேசில் நாட்டில் வாட்ஸ்அப் செயலியை சுமார் 12 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு அடுத்தப்படி வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடாகவும் பிரேசில் இருக்கிறது.

பிரேசில் நாட்டில் பல்வேறு சிறு வியாபரங்கள் வாட்ஸ்அப் செயலியை கொண்டு வியாபாரத்திற்கு விளம்பரம் செய்ய பயன்படுத்தி வருகின்றன. புதிய அம்சம் பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும் என பிரேசில் நாட்டிற்கான வாட்ஸ்அப் நிர்வாக அலுவலர் மேட் இடெமா தெரிவித்தார்.

வழக்கமாக வாட்ஸ்அப் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்றே வாட்ஸ்அப் பேமண்ட் சேவையில் மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சத்தினை 2018 ஆம் ஆண்டு முதல் சோதனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo