WhatsApp அதிகாரப்பூர்வமாக அனைத்து அளவிலான க்ரூப் வொயிஸ் சேட்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது, பல பங்கேற்பாளர்களைக் கொண்ட பெரிய க்ரூப்க்கு அப்பால் செயல்பாட்டை விரிவுபடுத்துகிறது. இதன் பொருள் க்ரூப்பின் இரண்டு மெம்பர் அல்லது டஜன் கணக்கானவர்கள் இருந்தாலும், யார் வேண்டுமானாலும் இப்போது நேரடி வொயிஸ் கான்வேர்செசன் எளிதாகத் தொடங்கி சேரலாம்.வொயிஸ் சேட்டை தொடங்க, பயனர்கள் குழு அடிப்பகுதியில் மேல்நோக்கி ஸ்வைப் செய்து சில வினாடிகள் வைத்திருக்க வேண்டும். இந்த சைகை நடந்து கொண்டிருக்கும் டெக்ஸ்ட் கான்வேர்செசன் தொந்தரவு செய்யாமல் உடனடியாக வொயிஸ் சேட்டை தொடங்குகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் க்ரூப் மெம்பரை வொயிஸ் சேட் ஆரம்பிக்கும்போது சும்மா சும்மா இடையில் எந்த ஒரு நோட்டிபிகேசன் அல்லது ரிங் அனுப்பது இந்த க்ரூப்பில் மெம்பரை சத்தமில்லாமல் சேரலாம் மற்றும் வெளியேறலாம், இந்த பின் செய்யப்பட்ட இன்டர்பேஸ் பங்கேற்பாளர்கள் காலிங் கட்டுப்பாடுகளை விரைவாக அணுகவும், தற்போது அரட்டையில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவும், அவர்கள் விரும்பும் போதெல்லாம் சேரவும் அனுமதிக்கிறது.
வொயிஸ் சேட் ஆரம்பிக்க முதலில் எதாவது ஒரு க்ரூப்க்கு செல்ல வேண்டும் அங்கு கீழ் சேட்டைபிடித்து ஒரு சில செகண்டுக்கு பிறகு அதை ஸ்வைப் செய்யலாம் அவ்வளவு தான் மேலும் நீங்கள் அந்த வொயிஸ் செட்டில் சேர்க்கப்பட்டிருப்பதை கீழே க்ரூப் சேட் ஸ்க்ரீனில் தோன்றும் இதன் மூலம் எளிதாக க்ரூப் மேம்பருடன் பேச முடியும் மேலும் மெம்பர்ஸ் எந்த ஒரு நோட்டிபிகேசன் இல்லாமல் சத்தமில்லாமல் க்ரூப் சேட்டில் சேரவோ அல்லது விலகவோ முடியும்.
வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட கால்கள் மற்றும் மெசேஜ்களை போலவே, வொயிஸ் சேட்களுக்கு முழுமையான குறியாக்கத்தால் பாதுகாக்கப்படுகின்றன என்று தளம் தெரிவித்துள்ளது. இதன் பொருள் உங்கள் கான்வேர்செசன் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
இதையும் படிங்க:Google I/O 2025:கூகுள் அதன் Android மற்றும் iOS பயனர்களுக்கு Gemini Live அறிவித்துள்ளது இந்த AI அம்சத்தால் கிடைக்கும் பல நன்மை