WhatsApp அதன் கஸ்டமர்களுக்கு புதிய AI wallpaper அம்சங்களை கொண்டு வந்துள்ளது அதாவது Meta AI பயன்படுத்தி தனித்துவமான சேட் பேக்ரவுண்ட் உருவாக்கலாம் இந்த புதிய அப்டேட் அதன் லேட்டஸ்ட் iOS வெர்சன் 25.19.75 யில் கிடைக்கிறது. இந்த அப்டேட் AI-powered சேட் வால்பேப்பர் Meta AI மூலம் உருவாக்கலாம். மேலும் இதை மேலும் Meta Ai பயன்படுத்தி நீங்கள் உங்கள் நண்ம்பர்களுடன் ஸ்மார்ட் ரிப்லை செய்ய முடியும் App ஸ்டோரில் அப்டேட் செய்யலாம் இது எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம் வாங்க.
WhatsApp யில் இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்?
இந்த அம்சத்தைப் பயன்படுத்த, iOS பயனர்கள் WhatsApp யின் சேட் தீம் அமைப்புகளில் உள்ள வால்பேப்பர் கஸ்டமைஸ் பகுதிக்குச் செல்லலாம். இங்கே அவர்கள் Meta AI உதவியுடன் வால்பேப்பரை உருவாக்கும் விருப்பத்தைப் பெறுவார்கள்.
முதலில் AI வால்பேப்பர் பயன்படுத்தத் chat சேட்டிங்கில் “wallpaper,” என்பதை தட்டி “AI wallpaper.” என்பதை தேர்ந்து எடுக்க வேண்டும்
““Create with AI” அல்லது “Meta AI” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் கற்பனைக்கு ஏற்ப ஒரு டெக்ஸ்ட் மெசேஜை உள்ளிடவும்.
மெட்டா AI, பயனர்கள் முன்னோட்டமிட ஸ்க்ரோல் செய்வதன் மூலம் கேட்கும் கமன்ட் அடிப்படையில் பல டிசைனை உருவாக்கும்.
ஒரு டிசைன் பிடிக்கவில்லை என்றால், பயனர்கள் அதை ஒரு புதிய மீண்டும் உருவாக்கலாம். மீண்டும் மீண்டும் முயற்சிப்பதன் மூலம், பயனர்கள் தங்கள் விருப்பப்படி தீம், நிறம், நோட்ஸ் மற்றும் பல கலவையை மேம்படுத்தலாம்.
வால்பேப்பரைத் தேர்ந்தெடுத்த பிறகு, பயனர்கள் பில்ட்டர் டூலை பயன்படுத்தி அதற்கு மேலும் பர்சனலைஸ் தொடுதலைச் சேர்க்கலாம். அவர்கள் வண்ணத் தட்டுகளை மாற்றலாம், கூறுகளைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம், மேலும் டிசைனில் விவரங்களை மேம்படுத்தலாம்.
இறுதி வால்பேப்பரை அனைத்து சேட்களில் உலகளவில் அமைக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட சேட்டுக்கு தனித்தனியாகப் பயன்படுத்தலாம். இது ஒவ்வொரு சேட்டுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.