வாட்ஸ்அப் அடுத்து Username அம்சத்திற்கு பதிலளித்த Telegram, அரசு கூறியது என்ன

HIGHLIGHTS

Telegram, சர்ச்சைக்குரிய Username அம்சம் தொடர்பாக அரசாங்கத்திடம் தனது பதிலைச் சமர்ப்பித்துள்ளது

யூசர்நேம் அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று வாட்ஸ்அப்பிற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

இந்த அம்சம் டிஜிட்டல் கைதுகளையும் பிற சைபர் மோசடிகளையும் அதிகரிக்கக்கூடும்

வாட்ஸ்அப் அடுத்து Username அம்சத்திற்கு பதிலளித்த Telegram, அரசு கூறியது என்ன

இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஷேரிங் தளமான Telegram, சர்ச்சைக்குரிய Username அம்சம் தொடர்பாக அரசாங்கத்திடம் தனது பதிலைச் சமர்ப்பித்துள்ளது. தற்போதைக்கு யூசர்நேம் அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று வாட்ஸ்அப்பிற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. யூசர்நேம் அம்சம் தொடர்பாக MeitY சமீபத்தில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் நிறுவனங்களை வரவழைத்தது. இந்த அம்சம் டிஜிட்டல் கைதுகளையும் பிற சைபர் மோசடிகளையும் அதிகரிக்கக்கூடும் என்று அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Telegram User Name அம்சதிர்க்கான பதிலை சமர்ப்பித்தது

User Name அம்சம் தொடர்பாக டெலிகிராமும் MeitY-க்கு தனது பதிலைச் சமர்ப்பித்துள்ளதாக PTI வட்டாரங்கள் தெரிவித்தன . இந்த அம்சத்தின் தவறான பயன்பாடு குறித்து வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஆகிய இரு நிறுவனங்களிடமும் அரசாங்கம் விளக்கம் கோரியிருந்தது. இந்த அம்சம் ஆள்மாறாட்டம், ஃபிஷிங், மோசடி மற்றும் பிற வகையான சைபர் மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அரசாங்கம் அஞ்சுகிறது. இந்த அம்சம் சைபர் மோசடிக்காரர்கள் தங்கள் போன் நம்பர்களை மறைக்க அனுமதிக்கிறது.

அரசு விசாரிக்கும்

இந்த அம்சம் தொடர்பாக வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் சப்மிட் பதில்களை அரசாங்கம் தற்போது ஆய்வு செய்யும். அதன் பின்னரே, இந்த சர்ச்சைக்குரிய அம்சம் குறித்து அரசாங்கம் பதிலளிக்கும். இந்த user name அம்சம், பயனர்கள் தங்களின் கான்டேக்ட் நம்பர்களை வெளிப்படுத்தாமல், இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஷேரிங் தளத்தில் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள அனுமதிக்கிறது.

இதையும் படிங்க இனி உங்களின் நெருங்கிய சொந்தங்களின் பிறந்த நாள் மறக்கவே மாட்டிங்க WhatsApp யில் Birthday Reminder அம்சம்

தற்போதைக்கு இந்தியாவில் இந்த அம்சத்தை வெளியிட வேண்டாம் என்று வாட்ஸ்அப்பிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது கலந்தாலோசனைகள் நடைபெற்று வருகின்றன, அதன் பின்னரே இதை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்படலாம். சைபர் மோசடி, ஃபிஷிங், டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்ட மோசடிகள் போன்ற தாக்குதல்களுக்கு இந்த அம்சம் பயன்படுத்தப்படலாம் என்று பல சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

டெலிகிராமைத் தவிர, சிக்னலுக்கும் அறிவிப்பு .

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மட்டுமின்றி, யூசர்நேம் அம்சம் தொடர்பாக சிக்னல் நிறுவனத்திற்கும் அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் வாட்ஸ்அப்பிற்கு 50 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். அதே சமயம், மற்ற தளங்களையும் மில்லியன் கணக்கான இந்தியப் பயனர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த யூசர்நேம் அம்சம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. மக்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து, டிஜிட்டல் சைபர் மோசடி உட்பட பல்வேறு மோசடிகளில் ஈடுபடலாம். இருப்பினும், கஸ்டமர்களின் ப்ரைவசியை கருத்தில் கொண்டே இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதாக வாட்ஸ்அப் கூறிவருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile