Instagram யில் End-to-End Encryption அம்சத்திர்க்கு முற்றுபுள்ளி, காரணம் என்ன சேட் பாதுகாப்பாக இருக்குமா?
இனி instgram யில் பயனர்களை ப்ரைவசி பற்றி கொஞ்சம் சிந்திக்க கட்டாயப்படுத்தியுள்ளது
இன்ஸ்டாக்ராமில் கிடைக்ககூடிய end-to-end encrypted (E2EE) டேரேக்ட் மெசேஜ் அமசைத்தை செயலிழக்க செய்கிறது
. இந்த அம்சம் தளத்தின் வலுவான பரைவாசி லேயர் ஒன்றாகக் கருதப்பட்டது
Meta யின் சொந்த சோசியல் மீடியா தளமான அதன் முக்கியமான அம்சத்தை நிறுத்துகிறது, இனி instgram யில் பயனர்களை ப்ரைவசி பற்றி கொஞ்சம் சிந்திக்க கட்டாயப்படுத்தியுள்ளது. தற்பொழுது நிறுவனம் இன்ஸ்டாக்ராமில்
கிடைக்ககூடிய end-to-end encrypted (E2EE) டேரேக்ட் மெசேஜ் அமசைத்தை செயலிழக்க செய்கிறது அதாவது எளிமையாக கூறினால் இந்த அம்சத்தை மூடுகிறது. இந்த அம்சம் தளத்தின் வலுவான பரைவாசி லேயர் ஒன்றாகக் கருதப்பட்டது. நிறுவனத்தின் சப்போர்ட் பக்கத்தில் உள்ள தகவலின்படி, இந்த அம்சம் மே 8, 2026 க்குப் பிறகு இனி வேலை செய்யாது என கூறப்பட்டுள்ளது இந்த அம்சத்தை நிறுத்த கரணம் என்ன தனது அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்கும் இதன் நன்மை என்ன ?
Surveyend-to-end encryption அர்த்தம் என்ன அதன் நன்மை என்ன?
எளிமையாகச் சொன்னால், முழுமையான end-to-end encryption அம்சம் பாதுகாக்கிறது, இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியும். ஹேக்கர்கள், மூன்றாம் தரப்பு சேவைகள், அல்லது மெட்டா கூட இந்த சேட்களை அணுக முடியாது. உங்கள் கான்வேர்செசன் ஒரு பூட்டிய அறையில் நடப்பது போல் நினைத்துப் பாருங்கள், அதை திறக்க உங்களால் மட்டுமே முடியும் அதே போன்ற அம்சம் ஆகும்.
இந்த அமைப்பு சிறப்பு கிரிப்டோகிராஃபிக் கீகளில் இயங்குகிறது, அவை ஒவ்வொரு டிவைஸ்க்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு மெசேஜை அனுப்பும்போது, அது உடனடியாக யாராலும் படிக்க முடியாத ஒரு கோடை மாற்றப்படும். மெசேஜ் மற்றவரின் போனை அடையும் போது மட்டுமே அதன் இயல்பான வடிவத்திற்குத் திரும்பும். இதே பாலிசி ஆடியோ மற்றும் வீடியோ கால்களுக்கு பொருந்தும்.
இதையும் படிங்க Nothing Phone (4a) vs Motorola Edge 70 இந்த இரு போனில் எது பெஸ்ட் என்ன வித்தியாசம்?
இத்தனை பாதுகாப்பு மிகுந்த அம்சத்தை Instagram ஏன் அகற்றுகிறது?
இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, இந்த முடிவுக்கு முதன்மையான காரணம் குறைந்த பயனர் ஆர்வம் என்று கூறுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, மிகக் குறைவான மக்களே மறைகுறியாக்கப்பட்ட அரட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்ப வலைத்தளமான தி வெர்ஜிடம் பேசிய மெட்டா செய்தித் தொடர்பாளர் டினா எல்-கசாபி, இந்த அம்சம் எதிர்பார்த்த அளவுக்கு பயன்பாட்டைப் பெறவில்லை என்று விளக்கினார். நிறுவனம் இப்போது அடிக்கடி பயன்படுத்தப்படும் அம்சங்களில் கவனம் செலுத்த விரும்புவதாகவும், பெரிய அளவில் பயனர்களுக்கு அதிக மதிப்பை உருவாக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
கூடுதலாக, ப்ரைவசி குறித்து நீண்டகாலமாக விவாதம் நடந்து வருகிறது. பல சட்ட அமலாக்க நிறுவனங்களும் குழந்தை பாதுகாப்பு அமைப்புகளும் இதுபோன்ற முற்றிலும் தனிப்பட்ட அமைப்புகள் ஆன்லைனில் மேல்வேர் செயல்பாட்டைக் கண்டறிவதை கடினமாக்குகின்றன என்று வாதிட்டன.
இந்தக் காரணத்திற்காக, மே 8, 2026க்குப் பிறகு மறைகுறியாக்கப்பட்ட அரட்டைகள் நிறுத்தப்படும் என்று மெட்டா தெளிவுபடுத்தியுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile