Instagram Tips
Instagram யில் இப்பொழுது புதிய AI வொயிஸ் ட்ரேன்ஸ்லேட் அம்சம் இப்பொழுது 5 மொழிகளில் கொண்டு வர இருக்கிறது. இந்த அம்சம் முன்பு ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசியம் போன்ற மொழிகளில் ரீல்களை டப் செய்து லிப்-சின்க் செய்யக் கிடைத்தது.
இப்பொழுது இந்த அம்சத்தை பெங்காலி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மராத்தி மொழிகளில் கொண்டு வர நிறுவனம் இப்போது தயாராகி வருகிறது. இருப்பினும், இந்த மொழிகளில் உள்ள பயனர்கள் வரும் மாதங்களில் இந்த அம்சத்தைப் பெறத் தொடங்குவார்கள் என்று மெட்டா கூறுகிறது.
Reel அப்லோட் செய்யும்போது இப்பொழுது ஒரு புதிய ஆப்ஷன் தெரியும் அதற்க்கு பெயர் ‘Translate your voice with Meta AI.’ என இருக்கும்.இன்ஸ்டாகிராம் தற்போது ரீல்களை ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசிய மொழிகளில் Translate விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் எதிர்கால புதுப்பிப்புகள் மேலும் இந்திய மொழிகளைச் சேர்க்கும், இதனால் பயனர்கள் தாங்கள் விரும்பும் மொழியை எளிதாகத் தேர்வுசெய்ய முடியும்.
இன்ஸ்டாகிராம் அதன் எடிட்ஸ் செயலியில் இந்திய போன்ட்களைச் சேர்த்துள்ளது. க்ரியேட்டர்களின் இப்போது தேவநாகரி மற்றும் பெங்காலி-அசாமி எழுத்துக்களில் போன்ட்களைப் பயன்படுத்தலாம். இந்த போன்ட்கள் பயனர்கள் தங்கள் டெக்ஸ்ட் மற்றும் தலைப்புகளை வடிவமைக்க அனுமதிக்கும். இது இந்தி, மராத்தி, பெங்காலி மற்றும் அசாமி போன்ற மொழிகளில் கண்டெண்டை உருவாக்குவதை எளிதாக்கும். இந்த புதிய அப்டேட் வரும் நாட்களில் ஆண்ட்ராய்டு பயனர்களை சென்றடையும் என்று நிறுவனம் கூறுகிறது.