இந்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுக்கும் விதமாக 18 OTT பிளாட்பர்ம்களுக்கு அவற்றுடன் தொடர்புடைய சோசியல் மீடியா அக்கவுண்ட்கள் மூடப்பட்டுள்ளன.
தொடர்புடைய 57 சோசியல் மீடியா அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டுள்ளன
#Central govt bans 18 OTT apps
இந்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுக்கும் விதமாக 18 OTT பிளாட்பர்ம்களுக்கு அவற்றுடன் தொடர்புடைய சோசியல் மீடியா அக்கவுண்ட்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஆபாசமான கண்ட்டேன்ட்கள் காட்டப்பட்டது. PTI அறிக்கையின்படி, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், இந்தியாவில் 18 ஓவர் டாப் (OTT) பிளாட்பாரம் 19 வெப்சைட்கள் 10 ஆப்ஸ் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 57 சோசியல் மீடியா அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. Google Play Store யில் 7 ஆப்களும் ப்ளாக் செய்யப்பட்டுள்ளது Apple App Store யில் 3 ஆப்களும் உள்ளன.
அறிக்கையின்படி, பல்வேறு அரசு துறைகள்/அமைச்சகங்கள், வல்லுநர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களுடன் கலந்துரையாடிய பின்னர், OTT தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த OTT பிளாட்பாரம் யில் அதிரடி நடவடிக்கை
Dreams Films
Voovi
Yessma
Uncut Adda
Tri Flicks
X Prime
Neon X VIP
Besharams
Hunters
Rabbit Xtramood
Nuefliks
MoodX Mojflix
Hot Shots VIP
Fugi
Chikooflix
Prime Play
இந்த நடவடிக்கை எடுக்க காரணம் என்ன
#OTT app banned
அறிக்கையின்படி, இந்த தளங்களில் காட்டப்படும் உள்ளடக்கத்தின் பெரும்பகுதி ஆபாசமானது மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கிறது. அவற்றுள் அநாகரீகம் அதிகமாக இருந்தது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவுகள் காட்டப்பட்டன. தவறான குடும்ப உறவுகள் சித்தரிக்கப்பட்டன.
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள OTT ஆப்களில் ஆப் 1 கோடிக்கும் அதிகமான டவுன்லோட்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் கூகுள் பிளே ஸ்டோரில் இரண்டு ஆப்ஸ் 50 லட்சத்துக்கும் அதிகமான முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. மக்களைச் சென்றடைவதற்காக, இந்தப் ஆப்கள் பார்வையாளர்களைக் கவரும் வகையில், சோசியல் மீடியா ஆப்களில் இதுபோன்ற காட்சிகளைக் காண்பிக்கும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.