ஓரம்போ WhatsApp இனி அரட்டை (Arattai) அதும் TV யில் மெசேஜ் பண்ணலாம் தமிழர் என்றால் தனி கெத்து தான்

Updated on 06-Oct-2025

Zoho நிறுவனத்தின் அரட்டை (Arattai) சமிப காலமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது அதாவது ஸ்ரீதர் வேம்பு நமது தமிழர் பெருமையை கெத்து காட்டும் விதமாக சிறப்பு சம்பவம் செய்து வருகிறார் என சொல்லலாம் ,மேலும் பலர் இங்கு WhatsApp யிலுருந்து மக்கள் அரட்டை யில் மாற ஆரம்பித்துள்ளனர், மேலும் அரட்டை ஆப் யின் மிக முக்கிய அம்சத்தில் ஒன்றாக டிவியில் சேட் மற்றும் மீட்டிங் போன்றவை செய்ய முடியும் அதை பற்றி முழுசா தகவல் பார்க்கலாம் வாங்க.

அரட்டை என்றால் என்ன ?

அரட்டை (Arattai) என்ற வார்த்தை தமிழ் வார்த்தையாகும் இதன் அர்த்தம் ஆங்கிலத்தில் Chat என்ற பொருளாகும் WhatsApp போல வொயிஸ் சேட், க்ரூப் சேட், மீடியா ஷேரிங், வொயிஸ் கால்/ வீடியோ காலிங் மற்றும் சேனல் ப்ரோட்காஸ்ட்டிங் போன்ற பல அம்சங்கள் வழங்குகிறது மேலும் இது பல டிவைஸ் சப்போர்ட் டெஸ்க்டாப் மற்றும் ஆண்ட்ரோய்ட் டிவி போன்றவற்றில் சப்போர்ட் செய்கிறது மேலும் இது மேட் இன் இந்தியா ஆப் ஆகும் எனவே இந்த ஆப மக்களை கவர்ந்துள்ளது மேலும் இதில் அ எழுத்து தமிழ்நாடு மக்களை கவர்ந்து இழுக்கும்.

இதையும் படிங்க:வச்சான் பாரு ஆப்பு Zoho மாஸ், WhatsApp மட்டுமில்லைங்க இனி Google டஃப் கொடுக்கும்போல டேட்டா பாதுகப்பு செம்ம

TV யில் செட்டிங்

உங்கள் வீட்டில் ஸ்மார்ட்டிவி இருந்தால் அதன் மூலம் நீங்கள் உங்கள் டிவியில் அரட்டை ஆப் பயன்படுத்த முடியும் அதாவது இதன் மூலம் எளிதாக சேட்டிங் பயன்படுத்த முடியும் ஆனால் இதை பயன்படுத்த வேண்டும் என நினைத்தால் உங்கள் TV ஸ்மார்ட்டிவியாக இருக்க வேண்டும் இது போன்ற மிக சிறந்த அம்சம் WhatsApp யில் கூட இல்லை மேலும் நீங்கள் மீட்டிங்கை கூட டிவியில் கனெக்ட் செய்து மீட்டிங் செய்ய முடியும், அதாவது WhatsApp யில் லேப்டாப், டேப்லெட் போன்றவற்றில் கனெக்ட் செய்யலாம் ஆனால் டிவியில் கனெக்ட் செய்ய முடியாது ஆனால் அரட்டையோ செம்ம மாஸ்

உங்களின் ஸ்மார்ட்டிவியில் ப்ளே ஸ்டோர் சென்று Arratai ஆப் டவுன்லோட் செய்வதன் மூலம் உங்கள் போனின் அக்கவுன்ட் லிங்க் செய்து உங்களின் டிவியில் எளிதாக பயன்படுத்தலாம், அதாவது அதை டவுன்லோட் செய்த பிறகு அதை உங்களின் அக்கவுன்ட் மூலம் லோக்இன் செய்ய வேண்டும் மேலும் டிவி தவிர indows, macOS மற்றும் Linux போன்ற 5 டிவைசில் பயன்படுத்தலாம்

பெரிய ஸ்க்ரீனில் கால்களை செய்யலாம்.

Arratai-யின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் அதை டிவி போன்ற பெரிய திரையில் மட்டும் பயன்படுத்த முடியாது, ஆனால் பெரிய ஸ்க்ரீனில் கால்கள் அல்லது குழு அழைப்புகளையும் செய்யலாம். Arratai செயலியில் உங்கள் தனியுரிமை குறித்து நீங்கள் கவலைப்பட்டால், Arratai-யில் உள்ள அரட்டைகள் போக்குவரத்தில் குறியாக்கம் செய்யப்படுகின்றன, மேலும் பயனர் தரவு விளம்பரதாரர்கள் அல்லது மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படாது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :