Arattai
இந்தியாவில் சொந்தமாக உருவாக்கப்பட்ட மெசேஜிங் தளம் Arattai ஆப் இப்பொழுது WhatsApp பின்னுக்கு தள்ளி முன்னே நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது இதன் முக்கிய காரணம் நமது சொந்த இந்திய மண்ணில் உருவாக்கப்பட்டது என்பதே ஆகும். அதாவது இந்த Arattai ஆப் யில் சேப்ட்டி மற்றும் செக்யூரிட்டி அம்சம் போன்றவற்றை பல மடங்கு அதிகரித்துள்ளது மேலும் அரட்டை என்ற வார்த்தை தமிழ் வார்த்தையாகும் அரட்டையின் அர்த்தம் Chat என்ற ஆங்கிலத்தில் அர்த்தம் இதன் முழு நன்மை மற்றும் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
அரட்டை (Arattai) ஆப் Zoho நிறுவனம் 2021 யில் அறிமுகம் செய்தது இது WhatsApp க்கு சரியான போட்டியை தரும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது மேலும் தற்பொழுது இந்த ஆப் 3 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது மேலும் நம்ம Perplexity CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் Zoho யின் CEO தலைவரான ஸ்ரீதர் வேம்புக்கு தனது X பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அதாவது அரட்டை யின் CEO ஸ்ரீதர் வேம்பு தனது twitter பக்கத்தில் இந்த ஆப்பை தினசரி பதிவுகள் மூன்றே நாட்களில் 3,000 யிலிருந்து 350,000 ஆக உயர்ந்துள்ளன, இது 100 மடங்கு அதிகரிப்பு ஆகும். ஜோஹோவின் தலைமை விஞ்ஞானியும் இணை நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு , திடீர் அதிகரிப்பால் ஏற்படும் உள்கட்டமைப்பை அளவிடுவதற்கும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் க்ரூபில் 24 மணி நேரமும் உழைத்து வருவதாக தெரிவித்தார்.
“மற்றொரு சாத்தியமான 100x உச்ச எழுச்சிக்காக அவசர அடிப்படையில் உள்கட்டமைப்பை நாங்கள் சேர்க்கிறோம். அதிவேகங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன,” என்று அவர் X யில் எழுதினார், நவம்பர் மாதத்தில் புதிய அம்சங்கள் மற்றும் மார்கெட்டிங் பிரச்சாரங்களின் திட்டமிடப்பட்ட வெளியீட்டிற்கு பல மாதங்களுக்கு முன்பே இந்த வளர்ச்சி வந்ததாகக் குறிப்பிட்டார்.
அரட்டை (Arattai) என்ற வார்த்தை தமிழ் வார்த்தையாகும் இதன் அர்த்தம் ஆங்கிலத்தில் Chat என்ற பொருளாகும் WhatsApp போல வொயிஸ் சேட், க்ரூப் சேட், மீடியா ஷேரிங், வொயிஸ் கால்/ வீடியோ காலிங் மற்றும் சேனல் ப்ரோட்காஸ்ட்டிங் போன்ற பல அம்சங்கள் வழங்குகிறது மேலும் இது பல டிவைஸ் சப்போர்ட் டெஸ்க்டாப் மற்றும் ஆண்ட்ரோய்ட் டிவி போன்றவற்றில் சப்போர்ட் செய்கிறது மேலும் இது மேட் இன் இந்தியா ஆப் ஆகும் எனவே இந்த ஆப மக்களை கவர்ந்துள்ளது மேலும் இதில் அ எழுத்து தமிழ்நாடு மக்களை கவர்ந்து இழுக்கும்.
இதையும் படிங்க:UPI புதிய ரூல் நவம்பர் 3 புதிய மாற்றம் பல பிரச்சனைக்கு தீர்வு
இந்தியாவின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பரிந்துரைக்கப்பட்ட ஆப்களில் அரட்டையையும் சேர்த்து உள்ளூர் டிஜிட்டல் தளங்களை சப்போர்ட் செய்யுமாறு குடிமக்களை பகிரங்கமாக வலியுறுத்தியபோது, இந்த நோக்கத்தின் காரணமாக இது பல மடங்கு அதிகரித்தது. அதே நேரத்தில், விவேக் வாத்வா போன்ற உயர் தொழில்நுட்பக் குரல்கள் இதை முயற்சித்துப் பார்த்து, அதன் மெருகூட்டலைப் பாராட்டினர், செய்தி அனுப்புவதில் இதை “இந்தியாவின் வாட்ஸ்அப் கில்லர் ” என்றும் அழைத்தனர்.
அரட்டை (Arattai) அச்சு அசலாக WhatsApp போலவே க்ரூப் chat,தனிப்பட்ட சேட், வொயிஸ் கால், வீடியோ கால் போன்ற பல அம்சம் ஈர்க்கிறது மேலும் இதில் தங்களின் எந்த தனிப்பட்ட சேட்டையும் நோட்டம் இடுவதில்லை என உருதி செய்துள்ளது மற்றும் டேட்டா ப்ரைவசியில் பல மடங்கு பாதுகாப்பாக இருக்கும் இருக்கும் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். மேலும் end‑to‑end encryption சிறிய வேலைகள் நடந்து வருவதாக தெரிவித்தார்
இந்தியக் கோடீஸ்வர தொழிலதிபரும், பன்னாட்டு நிறுவனமான சோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியும் ஆவார் மேலும் இவர் தமிழ்நாட்டில் 1968 ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார்