Aadhaar data of over 81 cror Indians leaked
Masked Aadhaar ‘இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம்’ UIDAI) மூலம் அறிமுகம் செய்யப்பட்டது ப்ரைவசியை அதிகரிக்கவும், ஆதார் தகவல்களை வெளியிடுவதை தடுக்கவும் இது அறிமுகப்படுத்தப்பட்டது. மாஸ்க்ட் செய்யப்பட்ட , ஆதார் நம்பரில் சில நம்பர்கள் மறைக்கப்பட்டிருக்கும், அதே நேரத்தில் பெயர், போட்டோ மற்றும் QR கோட் போன்ற அத்தியாவசிய மக்கள்தொகை விவரங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன
ஆதார் என்பது பயனர்களின் பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் UIDAI வழங்கிய 12 டிஜிட் தனிப்பட்ட அடையாள நம்பறகும்
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாஸ்க்ட் ஆதார் என்பது உங்கள் ஆதார் கார்டினை பதிப்பாகும், அதில் உங்கள் ஆதார் நம்பரின் முதல் 8 இலக்கங்கள் ‘X’ என்று மாற்றப்படுகின்றன. உங்கள் ப்ரைவசியை பாதுகாக்கவும், உங்கள் ஆதார் நம்பரை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இது செய்யப்படுகிறது. இது பெரும்பாலான நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
உங்கள் ஆதார் நம்பரை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமானால், உங்கள் முழுமையான ஆதார் நம்பரை வழங்குவதற்குப் பதிலாக மாஸ்க்ட் ஆதார் நம்பரை ஷேர் செய்யலாம். இது உங்கள் ப்ரைவசியை பாதுகாக்க உதவும்.
இதையும் படிங்க: வீட்டிலிருந்தபடி இந்த வாரம் OTT யில் வெளிவந்த Movie மற்றும் Web series பார்த்து மகிழலாம்
உங்கள் மாஸ்க்ட் ஆதார் ஆவணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம் என்பதையும், தெரியாத அல்லது அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.