TV Buying Guide Tamil: ஒரு டிவி வாங்கும்போது என்ன அம்சங்கள் இருக்க வேண்டும் ?

Updated on 12-Sep-2025

TV Buying Guide: நாம் ஒரு TV வாங்க நினைத்தால் அந்த டிவியில் என்ன என்ன அம்சங்கள் இருந்தால் சரியாக இருக்கும், எப்படி இருக்க வேண்டும் , அதிக நாள் நீடித்துலைக்குமா என பல கேள்விகள் உண்டு இதில் டிஸ்ப்ளே குவாலிட்டி, LED, OLED மற்றும் QLED ஸ்க்ரீன் சைஸ் எது பெஸ்ட்டாக இருக்கும், ப்ரோசெசர் மற்றும் ரேம் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என வரும் பல கேள்விகளுக்கு பதில் இங்க வேண்டும் நாம் எப்படி பட்ட டிவி வாங்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

ஸ்க்ரீன் சைஸ்

நாம் ஒரு டிவியை வாங்கும முன் முதலில் பார்ப்பது அதன் ஸ்க்ரீன் சைஸ் , அந்த சைஸ் எப்படி இருக்க வேண்டும் என்றால் உங்கள் ரூமின் சைசுக்கு ஏற்றது போல இருக்க வேண்டும் அதாவது ஒரு மிக சிறிய ரூமில் 55க்கு மேல் சைஸ்ல் இருக்கும் TV வைப்பது என்பது அவ்வளவு சிறப்பாக இருக்காது, ஆனால் சரியான சைஸ் என்பது நீங்கள் எவ்வளவு தூரத்திலிருந்து பார்கிறிர்களோ அதை பொறுத்து ஆகும் ஆனால் எப்பொழுதும் அதன் (diagonal) குறுக்கான சைஸ் ஆகும்.

ஸ்க்ரீன் ரெசளுசன் என்னவாக இருக்க வேண்டும் ?

ஒரு டிவியின் ரெசளுசன் என்பது மிக முக்கியமாகும் டெலிவிஷன் டெக்நோலோஜியில் HD Ready ஸ்க்ரீன்கள் அடிப்படை டிவி ஆகும். இதில் HD அல்லது HD Ready நமக்கு டபுள் க்ளியரிட்டி மற்றும் ரெசளுசன் வழங்குகிறது, எனவே நாம் ஒரு டிவி வாங்கும்போது உங்கள் பட்ஜெட்டில் வரும் டிவி ரூம் சைஸ்க்கு ஏற்றவாறு வாங்கணுமெ தவிர லேப்டாப் சைஸ் அல்ல.

LED, OLED, QLED எது பெஸ்ட்டாக இருக்கும்?

LED, OLED, QLED screen தொழில்நுட்பம்: எந்தத் ஸ்க்ரீன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது பார்க்கும் அனுபவத்தை கணிசமாகப் பாதிக்கிறது. ஒவ்வொரு வகை ஸ்க்ரீனையும் அதன் நன்மை தீமைகளைக் கொண்டுள்ளது.

LED ஸ்க்ரீன் நன்மைகள் – அவை மெல்லிய டிசைன் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட வியுவிங் என்கில் கொண்டுள்ளன. LED ஸ்க்ரீன் கொண்ட டிவிகள் சிறிய ஸ்க்ரீன் சைஸ்களில் கிடைக்கின்றன. இவை மிகவும் தெளிவான ப்ரைட்னஸ் எபக்ட் உடன் வரும் .

LED ஸ்க்ரீன் தீமைகள் – சில என்கிளில் இருந்து பார்க்கும்போது அவற்றைப் பார்ப்பது கடினமாக இருக்கலாம். LED ஸ்க்ரீன்கள் சுவரில் பொருத்துவதும் கடினம்.

OLED டிஸ்ப்ளேவின் நன்மைகள் – மென்மையான வடிவமைப்பு. திரை பின்னடைவு அல்லது திரை மங்கல் இல்லை. உண்மையான கருப்பு, சிறந்த வண்ண தொழில்நுட்பம். அதிக கோணங்களில் இருந்து பார்க்க முடியும்.

OLED டிஸ்ப்ளேவின் தீமைகள் – அதன் பிக்சல்கள் சில குறைபாடுகளைக் கொண்டுள்ளன. மற்ற டிஸ்ப்ளேக்களுடன் ஒப்பிடும்போது QLED மிக சிறந்த ப்ரைட்னாஸ் இழக்கிறது. OLED டிவிகள் விலை அதிகம்.

QLED டிஸ்ப்ளேவின் நன்மைகள்- இந்த டிவிகள் LCDகளை விட 50 – 100 மடங்கு தெளிவான ப்ரைட்னாஸ் கொண்டுள்ளன. QLED டிவிகள் பெரிய மற்றும் சிறிய சைஸில் கிடைக்கின்றன. QLED ஸ்க்ரீன் சிறந்த கான்ட்ராஸ்ட் ரேசியோ , மெல்லிய மற்றும் பெசெல்லஸ் பேனல்களைக் கொண்டுள்ளன. OLEDகளுடன் ஒப்பிடும்போது QLED மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்றது.

QLED டிஸ்ப்ளேவின் தீமைகள்- OLED டிஸ்ப்ளேக்களுடன் ஒப்பிடும்போது அவை வியுவிங் என்கில் சற்று மோசமாக இருக்கும் . QLED டிஸ்ப்ளேக்கள் OLED டிஸ்ப்ளேக்களை விட ஸ்லோவான ரேச்போன்ஸ் நேரத்தை கொண்டுள்ளது கொண்டுள்ளன. குறைபாடு என்னவென்றால், அவை நிறங்களின் டார்க் டோன் இழக்கின்றன.

இதையும் படிங்க:Dolby Atmos TV: பெஸ்ட் தரமான சவுண்ட் அம்சங்களுடன் வரும் 43 இன்ச் டிவி பட்டய கிளப்பும் ஆபர்

மற்ற அம்சங்கள் என்னவெல்லாம் பார்க்க வேண்டும்?

  • பிக்ஜர் ப்ரோசெசர் :- இது பிக்ஜர் குவாலிட்டி ஹையர் ரேசளுசன் மற்றும் ஷார்ப்பான குவாலிட்டி உடன் தெளிவான அனுபவம் பெற முடியும்.
  • க்ளியரிட்டி:-இதன் மூலம் தெளிவான விஷுவல், க்ரிஸ்ப் மற்றும் தெளிவை பெறலாம்
  • காண்ட்ராஸ்ட்:- இதன் காண்ட்ராஸ்ட்:- என்பது சிறந்த கலர் மற்றும் டார்க் உடன் மிக சிறந்த வியூவிங் அனுபவம் வழங்குகிறது மற்றும் இதனுடன் HDR அம்சத்தின் மூலம் தெளிவான பிக்ஜர் குவாலிட்டி உடன் 4K டிஸ்ப்ளே சிறந்த அம்சம் வழங்குகிறது.
  • ரேம் மற்றும் ஸ்டோரேஜ் :-எப்பொழுதும் அதிகமான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்டதாக பார்க்க வேண்டும் ஏன் என்றால் எந்த ஒரு ஆப் லோட் ஆகுயம்போது பிரசை இருக்காது ஸ்மூத்தாக செயல்படும், மேலும் உங்களுக்கு பிடித்த கன்டென்ட் ரெக்கார்ட் மற்றும் ஸ்டோரேஜ் செய்ய முடியும் அதாவது இதை எல்லாம் சமாளிக்க 2 லிருந்து 4 GB RAM மற்றும் 16-32 GB ஸ்டோரேஜ் இருக்க வேண்டும் ஆப் இல்லாமல் சாதரணமாக பயன்படுத்தினால் 1 GB போதுமானது
  • ஸ்மார்ட் ரிமோட் :- தற்பொழுது ரிமோட்டில் பல விதமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளது அதில், வொயிஸ் கண்ட்ரோல், கீபோர்ட் மற்றும் டச் பேட்கள் போன்றவை கொண்டுள்ளது எந்த ஒரு ஆப் அல்லது உங்களின் டிவியை ரிமோட் வைத்து கண்ட்ரோல் செய்ய முடியு.
  • சவுண்ட் : சவுண்ட் அனுபவத்தை மேம்படுத்த உங்கள் டிவியில் நல்ல ஆடியோ சப்போர்ட் உள்ளதா என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். அது அதிக வாட்டேஜ் கொண்ட டிவியாக இருந்தால், உங்களுக்கு சிறந்த சவுண்ட் அனுபவம் கிடைக்கும். இதற்காக சரவுண்ட் சவுண்ட், டால்பி டிஜிட்டல் மற்றும் டிடிஎஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளலாம்.
  • கனெக்ஷன்: HDMI போர்ட்கள், ஆடியோ போர்ட்கள் மற்றும் VGA போன்ற போர்ட்கள் கொண்ட தொலைக்காட்சிகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :