Top 5 TV Brand: ஒவ்வொரு டாப் பிராண்டுக்கும் ஒரு அம்சம் இருக்கு அது என்னனு உங்களுக்கு தெரியுமா

Updated on 28-Sep-2025

Top 5 TV Brand: ஒவ்வொரு டாப் பிராண்டுக்கும் ஒரு அம்சம் இருக்கு அது என்னனு உங்களுக்கு தெரியுமாடிஜிட்டல் உலகத்தில் Smart TV டிமாண்ட் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு பிராண்டில் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது, மேலும் இப்பொழுது சேல் வருவதால் எந்த பிராண்ட் வாங்குவது என்ற குழப்பம் இருக்கிறது அந்தவகையில் உங்களின் குழப்பத்தை சரி செய்யும் வகையில் இங்கு நாங்கள் எந்த பிராண்டில் என்ன குண அம்சம் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க. இங்கு இந்த லிஸ்ட்டில் Samsung, Sony,TCL LG மற்றும் panasonic ஆகும்.

Samsung: மிக சிறந்த டிஸ்ப்ளே டெக்நோலாஜி

மிகவும் பிரபலமான தொலைக்காட்சி பிராண்டுகளில் Samsung ஒன்றாகும். இது 2008 ஆம் ஆண்டில், சாம்சங் அதன் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது மற்றும் என்டர்டைன்மென்ட் உலகத்தை நாம் பார்க்கும் விதத்தை மாற்றியது. இந்த தென் கொரிய பிராண்ட் தேவைக்கேற்ப பல்வேறு விலை ரேன்ஜ்கள் மற்றும் சைஸ்களின் டிவிகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை உற்பத்தி செய்கிறது. மிக சிறந்த டிஸ்ப்ளே,தெளிவான ஆடியோ மற்றும் அப்டேட் செய்யப்பட்ட டெக்நோலோஜி ஆகியவை வழங்குகிறது மேலும் தற்பொழுது ,QLED தொழில்நுட்பம், AI அப்ஸ்கேலிங், HDR மற்றும் பலவற்றைக் கொண்ட சாம்சங் ஸ்மார்ட் டிவிகள், பல்வேறு விலை ரேஞ்ச்களில் வருகிறது.

LG: OLED மிக சிறந்த டிசைன் கொண்டது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு பிராண்ட் என்றால் அது LG தான், இதற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. LG என்பது பல்வேறு விலை ரேஞ்ச்களில்களில் ஸ்மார்ட் டிவிகளை வழங்கும் ஒரு வீட்டு உபயோகப் பொருள் நிறுவனமாகும். பல LG தொலைக்காட்சிகள் கன்டென்ட் காண்பிக்க பல வழிகளை வழங்க மல்டி-வியூ, பிற ஸ்மார்ட் ஹோம் டிவைஸ் கண்ட்ரோல் AI ThinQ தொழில்நுட்பம் மற்றும் கஸ்டமைஸ் என்டர்டைன்மென்ட் வழங்குகின்றன. LG Web OS பயனர்கள் ஆப்கள் மற்றும் லைவ் டிவிக்கு இடையில் விரைவாக மாற அனுமதிக்கிறது, கன்டென்ட் Wi-Fi, AI Picture Pro, Dolby Vision, Filmmaker ஆகியவற்றைக் கொண்டுள்ளது மற்றும் அதிக HDR திறனைக் கொண்டுள்ளது. மேலும், OLED டிஸ்ப்ளேக்கள் கொண்ட ப்ளாக்ஷிப் தொலைக்காட்சிகள் துல்லியமான பிக்சல் சைஸ் சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன.

Sony:ஆடியோ மற்றும் பிக்ஜருக்கு பெஸ்ட்டானது

சிறந்த கலர் மிக சிறந்த வைப்ரேட் டிஸ்ப்லேகளை வழங்க சோனி ஆடியோ மற்றும் பட துல்லியத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது. OLED மற்றும் LED போன்ற அதிநவீன டிஸ்ப்ளே தொழில்நுட்பங்களுக்கு பெயர் பெற்ற இந்த டிவிகள் மிக சிறந்த கலர்,டீப் ப்ளாக் ஆகியவற்றை வழங்குகின்றன. மிட் ரேன்ஜ் அளவிலான ஸ்மார்ட் டிவிகள் முதல் ஹை எண்டு பிராவியா டிவி மாடல்கள் வரை, இவை ட்ரைலுமினோஸ் டிஸ்ப்ளே, எக்ஸ்-மோஷன் கிளாரிட்டி, HDR மற்றும் IMAX அப்டேட் சான்றிதழ்கள் போன்ற அம்சங்களுடன் வருகின்றன. கூடுதலாக, சில ஸ்மார்ட் டிவிகள் சவுண்ட் தரத்தில் சிறந்து விளங்குகின்றன, அகோஸ்டிக் சர்ஃபேஸ் ஆடியோ மற்றும் டால்பி அட்மாஸ் சப்போர்ட் போன்ற அம்சங்களுடன். ஒட்டுமொத்தமாக, மிக சிறந்த பர்போமான்ஸ் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:BBD Sale: ப்ளிப்கார்ட் ஸ்பெஷல் ஆபர் Infinix 43 இன்ச் கொண்ட QLED TV வெறும் ரூ,12,199 யில்

TCL: பட்ஜெட் ரேஞ்சில் வருவதில் இது பெஸ்ட்

இந்த லிஸ்ட்டில் நான்கவதாக வரும் இது பட்ஜெட் ரேஞ்சுக்கு பெயர் பெற்றது TCL, இது 2014 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் டிவிகளை தயாரிப்பதில் இருந்து TCL பிராண்ட் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறித்தது. குறைந்த விலையில் புதிய டிவி வாங்குவதில் புகழ்பெற்றது TCL ஸ்மார்ட் டிவிகள், Roku TV மற்றும் Google TV போன்ற தொழில்நுட்பங்களை அவற்றின் மாடல்களில் ஒருங்கிணைத்து, ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் பயன்பாடுகளுக்கு தடையற்ற அக்சஸ் வழங்குகின்றன. கூடுதலாக, TCL டிவிகள் வைப்ரேட் படத் தரம் மற்றும் நல்ல சவுண்ட் பர்போமான்ஸ் வழங்குகின்றன, இது பட்ஜெட் உணர்வுள்ள வாங்குபவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. ஒவ்வொரு இந்திய வீட்டின் தேவையையும் மனதில் கொண்டு, பல்வேறு சைஸ்கள் மற்றும் விலை ரேஞ்சில் TCL ஸ்மார்ட் டிவிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

Panasonic: சினிமாடிக் லுக்கில் பெஸ்ட்டானது

Panasonic ஸ்மார்ட் டிவிகள், ரூமுக்கு புதுமை மற்றும் சினிமா தரத்திற்கு பெயர் பெற்றவை. இந்த ஜப்பானிய பன்னாட்டு எலக்ட்ரோனிக் நிறுவனம் 2013 யில் அதன் முதல் ஸ்மார்ட் டிவி வரிசையை அறிமுகப்படுத்தியது, அதன் பின்னர், ஒவ்வொரு குடும்பத்தின் நவீன தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. அவற்றின் தெளிவான 4K அல்ட்ரா HD டிஸ்ப்ளேக்கள் மற்றும் சிறந்த சவுண்ட் அமைப்புகளுக்கு பெயர் பெற்ற பானாசோனிக் ஸ்மார்ட் டிவிகள், வீட்டு என்டர்டைன்மென்ட் மறுவரையறை செய்கின்றன. வைப்ரேட் கலர்கள் மற்றும் டைனமிக் கான்ட்ராஸ்ட்களுக்காக OLED பேனல்கள், டால்பி விஷன் மற்றும் HDR10+ போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இருந்து, ஒவ்வொரு விவரமும் உயிர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்வது வரை, தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை பானாசோனிக் சிறந்த ஸ்மார்ட் டிவி பிராண்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :