75 inch tv
இந்தியாவில், சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பல பொருட்களுக்கான ஜிஎஸ்டியை GST கவுன்சில் குறைத்துள்ளது, இப்போது 5% மற்றும் 18% என்ற இரண்டு லேயர்கள் மட்டுமே பொருந்தும். ஆடம்பரப் பொருட்களுக்கான GST 40% ஆகவே இருக்கும். இன்று வீடுகளில் பொதுவான தேவையாக இருக்கும் 32 இஞ்சை விட பெரிய ஸ்மார்ட் டிவிகளைப் பற்றிப் பார்க்கலாம் இது . 32 இன்ச்களை விட பெரிய ஸ்மார்ட் டிவிகளுக்கான GST அரசாங்கம் 28% யிலிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது. அதாவது நீங்கள் ஒரு புதிய டிவியை வாங்கத் நினைத்தால் , செப்டம்பர் 22 க்குப் பிறகு அதை வாங்கினால் மிக பெரிய அளவில் பணத்தை மிச்சப்படுத்தலாம்
சோனி பிராவியா 2 II 75 இன்ச் கூகிள் டிவி பிளிப்கார்ட்டில் ரூ.1,26,990க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . சோனி பிராவியா 2 II 75 இன்ச் கூகிள் டிவி 75 இன்ச் அல்ட்ரா HD (4K) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 3840 x 2160 பிக்சல்கள் ரெசளுசனை கொண்டுள்ளது. இந்த டிவி கூகிள் டிவியில் வேலை செய்கிறது. 18 சதவீத ஜிஎஸ்டியுடன், விலை ரூ.1,17,068 ஆக இருக்கும்.
தாம்சன் பீனிக்ஸ் 75 இன்ச் ஸ்மார்ட் டிவி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ரூ.69,999க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . தாம்சன் பீனிக்ஸ் 75 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 75 இன்ச் QLED அல்ட்ரா HD (4K) டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிவி டால்பி விஷன் ஆட்டம்ஸை ஆதரிக்கிறது. 18 சதவீத ஜிஎஸ்டிக்குப் பிறகு விலை ரூ.64,532.25 ஆக இருக்கும்.
Acer Advanced I Series 75 i 75 இன்ச் ஸ்மார்ட் டிவி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ரூ.69,999க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . ஏசர் அட்வான்ஸ்டு I சீரிஸ் 75 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 75 இன்ச் அல்ட்ரா HD (4K) LED டிஸ்ப்ளே உள்ளது. 18 சதவீத ஜிஎஸ்டியுடன், விலை ரூ.64,532.25 ஆக இருக்கும்.
ப்ளாபங்க்ட் 75 இன்ச் ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட்டில் ரூ.69,999க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . ப்ளாபங்க்ட் 75 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 75 இன்ச் QLED அல்ட்ரா HD (4K) டிஸ்ப்ளே உள்ளது. கூகிள் டிவியில் இயங்கும் இந்த டிவி, டால்பி விஷன் மற்றும் ஆட்டம்ஸை ஆதரிக்கிறது. 18 சதவீத ஜிஎஸ்டியுடன், விலை ரூ.64,532.25 ஆக இருக்கும்.
இதையும் படிங்க Dolby Audio சப்போர்டுடன் வரும் பெஸ்ட் TV தரமான சவுண்ட் குவலிட்டியுடன் உங்கள் வீடு இருக்கும் சினிமா தியேட்டர் போல