Vodafone Idea
Vodafone Idea Limited (VIL)மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும். இது தற்பொழுது அதன் கசடமர்களுக்கு இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை கஸ்டமர்களுக்கு கொண்டு வந்துள்ளது, இருப்பினும் டெலிகாம் நிறுவனம் இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை, ஆனால் இந்த திட்டமானது பல கஸ்டமர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வட்டாரங்களுக்கு கிடைக்கிறது.
இந்த திட்டத்தின் விலை பற்றி பேசினால் இது ரூ,150க்குள் வருகிறது அதாவது இந்த திட்டமானது குறைந்த விலையில் சிம் எக்டிவில் வைத்திருக்க விரும்புவோர்களுக்கு சிறப்பானது இந்த திட்டமானது ரூ,128 மற்றும் ரூ,138 யில் வருகிறது சரி இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,128 யில் 18 நாட்களுக்கு சேவை வேலிடிட்டி வழங்குகிறது, அதாவது இந்த திட்டத்தில் 100MB டேட்டா மற்றும் லோக்கல் கால்களுக்கு நேசனல் 2.5 பைசா வினாடிக்கு வழங்குகிறது, இதில் 10 லோக்கல் ஆன்-நெட் நைட் நிமிடங்களும் உள்ளன. இந்த இரவு நிமிடங்கள் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை கஸ்டமர்களுக்கு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் அவுட்கோயிங் SMSகள் எதுவும் இல்லை.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டமானது ரூ,138 யில் வருகிறது இதனுடன் இதன் சேவை வேலிடிட்டி 20 நாட்கள் ஆகும், இதில் 100MB யின் டேட்டா வழங்கப்படுகிறது மேலும், இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அதே 10 உள்ளூர் ஆன்-நெட் இரவு நிமிடங்கள் மற்றும் உள்ளூர் அழைப்புகளை 2.5 பைசா/வினாடிக்கு வழங்குகிறது. அவுட்கோயிங் எஸ்எம்எஸ்கள் எதுவும் இல்லை மற்றும் நைட் நிமிடங்கள் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை கிடைக்கும்.
இந்த இரண்டு திட்டமும் குறைந்த விலையில் வரும் திட்டமாகும் மேலும் இது சிம் எக்டிவில் வைக்க உதவும் மேலும் இது கர்நாடக வட்டாரங்களில் இருக்கும். ஆனால் வெவ்வேறு வட்டங்களில், ஒரே மாதிரியான திட்டங்கள் இருக்காது. TRAI (Telecom Regulatory Authority of India) ஏற்கனவே தொலைத்தொடர்பு நிறுவனங்களை எஸ்எம்எஸ் மற்றும் குரல் மட்டும் சிறப்பு கட்டண வவுச்சர்களை (STV) கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்க. ஆணை ஜனவரி 2025 யின் இரண்டாம் பாதியில் நடைமுறைக்கு வரும்.
இதையும் படிங்க:Airtel நெட்வொர்க்கில் சிக்கல் சோசியல் மீடியாவில் கொந்தளிக்கும் மக்கள்