Jio Vs Vi Vs Airtel:தினமும் 2GB டேட்டா,காலிங் போன்ற பல நன்மை தரும் திட்டத்தில் எது செம்ம கெத்து

Updated on 06-Nov-2025

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் Jio, Vi, மற்றும் Airtel ஒன்றோடு இன்று போட்டி போட்டு கொண்டு பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது இப்பொழுது இந்த மூன்று திட்டங்களிலும் தினமும் 2GB டேட்டா நன்மையுடன் குறைந்த விலையில் எது அதிக நன்மையை தருகிறது என பார்க்கலாம் உண்மையிலெ இதில் எது கெத்து என்பதையும் பார்க்கலாம் வாங்க

Jio ரூ,899 யில் வரும் திட்டம்

ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,899 யில் வருகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 2 GB டேட்டா உடன் கூடுதலாக 20 GB டேட்டா வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 200 GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது இதை தவிர இந்த திட்டத்தில் Festive offer நன்மையும் பெறலாம் இதை தவிர JioTV JioAICloud சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் JioHotstar Mobile/TV சப்ஸ்க்ரிப்ஷன் மூன்று மாதங்களுக்கு இலவசமாக பெறலாம் மற்றும் இதில் அன்லிமிடெட் 5G நன்மை பெறலாம்.

இதையும் படிங்க:Amazon Prime மற்றும் Netflix இலவசமா வேணுமா Jio யின் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் காலிங் டேட்டா ஆல் இன் ஆல் நன்மை

Airtel ரூ,979 திட்டத்தின் நன்மை

ஏர்டெலின் ரூ,979 திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா நன்மையுடன், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100SMS நன்மையை வழங்குகிறது ஆனால் இதன் வேலிடிட்டி என வரும்போது 84 நாட்களுக்கு வழங்குகிறது இதை தவிர உங்கள் ஏரியாவில் மிக சிஒறந்த 5G கவரேஜ் கிடைத்தால் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது மேலும் இதில் 20க்கும் மேற்பட்ட OTT நன்மைகள் வழங்கப்படுகிறது அதில் Airtel Xstream Play,Sony Liv போன்ற பல நன்மைகள் பெறலாம்.

VI ரூ,996 திட்டத்தின் நன்மை

வோடபோன் ஐடியாவின் ரூ,996 திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,996 யில் வருகிறது, இதில் டருளி அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மையை பற்றி பேசினால் இதில் 84 நாட்கள் உடன் வருகிறது இதை தவிர இந்த திட்டத்தில் 12 AM நள்ளிரவு to 12 PM வரை அன்லிமிடெட் டேட்டா மற்றும் வீக் எண்டு டேட்டா ரோல்ஓவர் நன்மை கிடைக்கும் இதை தவிர கூடுதலாக 2GB டேட்டா நன்மை அதன் VI ஆப் மூலம் ரீசார்ஜ் செதால் பெறலாம் இதை தவிர Amazon Prime சப்ஸ்க்ரிப்ஷன் 90 நாட்களுக்கு இலவசமாக பெறலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :