jio vs BSNL
Relience Jio மற்றும் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டி போட்டு கொண்டு பல புதிய திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இப்பொழுது குறைந்த விலையில் அதாவது வெறும் ரூ,500க்குள் வரும் இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்குகிறது , இருப்பினும் அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனம் அதிக வேலிடிட்டியை வழங்குகிறது மேலும் இந்த 3G டேட்டா நன்மையுடன் வரும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட்.
ஜியோ தனது கஸ்டமர்களுக்கு ரூ.449 திட்டத்தை வழங்குகிறது. இதில், பயனருக்கு 28 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிறுவனம் மொத்தம் 84 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதனுடன், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஜியோஹோம்-இன் 2 மாத இலவச டெஸ்ட்டிங் கிடைக்கிறது. இது தவிர, மொபைல்/டிவிக்கான ஜியோஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன் 3 மாதங்களும் இங்கே வழங்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், கூகிள் ஜெமினி ப்ரோவின் 18 மாத சந்தாவும் இந்த திட்டத்துடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனர்களுக்கு நிறுவனம் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் வழங்குகிறது.
BSNL-இன் WFH ரூ.599 STV திட்டம், வீட்டு மற்றும் தேசிய ரோமிங்கில் அன்லிமிடெட் இலவசவொயிஸ் கால்கள் (டெல்லி மற்றும் மும்பையில் MTNL நெட்வொர்க் உட்பட), 3GB/நாள் கழித்து 40 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 70 நாட்கள் வேலிடிட்டி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. முன்னதாக, இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது ஆனால் இப்பொழுது ,விலை அதே தா தான் ஆனால் வேலிடிட்டியில் 14 நாட்கள் குறைப்பு.