Jio VS Airtel VS VI: தினமும் 1.5GB டேட்டா 84 வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தில் யாரு கெத்து ?

Updated on 11-Feb-2026

தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிறுவனம் என்றால் அது Reliance Jio, Bharti Airtel, மற்றும் Vodafone Idea (Vi) ஆகும் இது இது ஒன்றோடு ஒன்று போட்டி போடும் விதமாக பல புதிய திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது மக்களிடத்தில் அதிக டிமாண்டில் இருக்கும் தினமும் 1.5GB டேட்டா வழங்கும் இந்த திட்டத்தின் நன்மையை பார்க்கலாம் வாங்க. Airtel மற்றும் Vodafone Idea மற்றும் வோடபோன் ஐடியா ரூ,859 யில் தரும் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ வெறும் ரூ,799 யில் தருகிறது இந்த மூன்று திட்டங்களையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,799 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.799 திட்டம் இந்த திட்டத்தில் த்கினமும் 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMSமற்றும் அன்லிமிடெட் வொயிஸ் காளிங்கை வழங்குகிறது. FUP (ஸ்டேடண்டர்ட் பயன்பாட்டுக் கொள்கை) டேட்டாவை பயன்படுத்திய பிறகு ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது. ஜியோடிவி மற்றும் ஜியோஏஐக்ளவுட் உள்ளிட்ட கூடுதல் சப்ஸ்க்ரிப்ஷன் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக, இந்த திட்டத்தில் 5G நன்மை எதுவும் இல்லை இது 84 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது .

பாரதி ஏர்டெல் ரூ.859 திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ.859. இந்த திட்டத்திலும், கஸ்டமர்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் வழங்குகிறது . FUP டேட்டா தீர்ந்த பிறகு, இதன் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது. ஏர்டெல்லின் திட்டம், ஜியோவுடன் நீங்கள் பெறுவதை விட சற்று விலை அதிகம் என்றாலும், இங்கே, நீங்கள் ஒரு வருடத்திற்கு ரூ.4,000 மதிப்புள்ள 12 மாத வேலிடிட்டி அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்தையும் பெறலா , மேலும் நீங்கள் ஒரு ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ரிவார்ட்ஸ்மினி சப்ச்க்ரிப்ஷனுடன் இந்த திட்டமும் 84 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது..

இதையும் படிங்க : கிரிகெட் பிரியர்களுக்கு Airtel 2 சூப்பர் திட்டம் அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் ஸ்பெஷல் OTT நன்மை

வோடபோன் ஐடியாவின் ரூ,859 திட்டம்.

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டம் ரூ,859 யில் வருகிறது இதில் தினமும் 1.5GB டேட்டா உடன் கஸ்டமர்கள் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100SMS மற்றும் 84 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது இதை தவிர கஸ்டமர்களுக்கு Binge All Night, வீகென்ட் டேட்டா ரோல் ஓவர் மற்றும் டேட்டா டிலைட் போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது

இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?

இங்கு இருக்கும் ஒவ்வொரு திட்டங்களும் ஒவ்வொரு வித்தியாசத்தை வழங்குகிறது அந்த வகையில் ஏர்டெல் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் வழங்குகிறது, அதே நேரத்தில் அதே விலையில், Vi இந்த கூடுதல் தரவு சலுகைகளையும் வழங்குகிறது. ஜியோ கவரேஜில் சிறந்தது, மேலும் மலிவானது, ஆனால் அங்கு அதிக கூடுதல் நன்மைகள் இல்லை. நாளின் இறுதியில், மதிப்பில், ஜியோ நல்லது, ஆனால் ஏர்டெல் மற்றும் வியின் சலுகைகளும் அப்படித்தான். இது அனைத்தும் உங்களுக்கு என்ன வகையான நன்மைகள் தேவை என்பதைப் பொறுத்தது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :