Airtel vs BSNL vs VI
டெலிகாம் நிறுவனமான Airtel, VI மற்றும் BSNL திட்டத்தில் வரும் ரூ,200க்கு வரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது மேலும் இந்த திட்டமானது ஒரே மாதுரி விலையில் வருகிறது அதாவது ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் வரும் ரூ,199 திட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் வேலிடிட்டி மற்றும் அதிக நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் ரூ,199 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 2GB டேட்டா மற்றும் 300 SMS வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது இதை தவிர இந்த திட்டத்தில் Vi Movies மற்றும் TV App மொபைல் ஸ்ட்ரீம் நன்மை கிடைக்கும் இதில் லேட்டஸ்ட் மூவிஸ், TV shows, Amazon MX Player, LIVE news மற்றும் பல பார்க்கலாம்
இதையும் படிங்க:VI மெகா சூப்பர் ஆபர் வெறும் ரூ,200க்குள் வரும் திட்டத்தில் ரூ,25,000 மதிப்புள்ள இன்சூரேன்ஸ் இலவசம்
ஏற்டேலின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,199 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டியை பற்றி பேசுகையில் இதில் மொத்தமாக 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதை தவிர இலவச ஹெலோ ட்யூன் perplexity pro போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
Airtel, VI மற்றும் BSNL திட்டத்தில் வரும் ரூ,199 பற்றி இந்த மூன்று நிறுவனங்களும் ஒரே மாதரியான வேலிடிட்டியை தான் வழங்குகிறது இதில் மிக பெரிய வித்தியாசம் என்றால் அது டேட்டா மட்டுமே BSNL தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது ஆனால் vI மற்றும் Airtel மொத்தமாக 2GB டேட்டாவை மட்டுமே வழங்குகிறது.