Jio vs Airtel offer Free Jiohotstar subscription with just rs 100 with data
Jio VS Airtel அதன் கஸ்டமர்களுக்கு அதன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து jio அதன் கஸ்டமர்களுக்கு ICC சேம்பியன் கிரிகெட் மேட்ச்க்காக அதன் கஸ்டமர்களுக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்தது, இதன் விலை ரூ, 949 ஆகும் இது jiohotstar நன்மை உடன் வருகிறது அதே போன்ற விலையில் Airtel அதன் கஸ்டம்ர்களுக்கு ரூ,979 யில் வருகிறது இதில் மொத்தம் 22OTT நன்மை வருகிறது இந்த இரு திட்டத்தையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
ஜியோ ஒரு சிறப்பு ப்ரீபெய்ட் திட்டத்தை அப்டேட் செய்துள்ளது . ICC சாம்பியன்ஸ் டிராபியில் முன்னிட்டு இந்த திட்டத்தை கொண்டு வந்து . ஜியோவின் ரூ.949 திட்டத்துடன் இந்தப் போட்டியை நீங்கள் இலவசமாகப் பார்க்கலாம். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் . இதில் நீங்கள் தினமும் 2 ஜிபி இன்டர்நெட் டேட்டாவை பெறலாம் . இதை தவிர இதில் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது. இந்தத் திட்டத்துடன் கிடைக்கும் Jiohotstar OTT ஆப் யில் இலவச சந்தா மிகப்பெரிய நன்மையாகும். அதாவது நீங்கள் 84 நாட்களுக்கு மூவீ, கிரிக்கெட் போட்டிகள், வெப் சீரிஸ் இலவசமாகப் பார்க்கலாம்!
இந்தத் திட்டத்தின் நன்மைகள் இத்துடன் முடிவடையவில்லை. இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது உண்மையான 5G டேட்டாவையும் வழங்குகிறது. ஜியோவின் பிரபலமான ரீசார்ஜ் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பேக், ஜியோடிவி, ஜியோக்லவுட் போன்ற ஆப்களுக்கான சப்ஸ்க்ரிப்சன் உங்களுக்கு வழங்குகிறது.
ஏர்டெல் அதன் கச்டமர்களுக்காக பல புதிய திட்டங்களை அதன் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துள்ளது. அத்தகைய ஒரு திட்டம் ரூ 979 ஆகும். இந்த திட்டம் பயனருக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா பலன்களை நீண்ட கால வேலிடிட்டியுடன் வழங்குவது மட்டுமின்றி, இது தவிர பல நன்மைகளையும் இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல்லின் ட்ரூலி அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பேக் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதாவது, இந்த திட்டத்தில் நிறுவனம் பயனருக்கு சுமார் 3 மாதங்கள் வேலிடிட்டியாகும். ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் இதை வாங்கலாம். இதை தவிர இதில் தினசரி அடிப்படையில் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில், பயனர் 84 நாட்களுக்கு தினசரி 100 இலவச SMS நன்மையைப் பெறலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி சப்போர்ட் இருந்தால், நிறுவனம் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது.
இந்த ஏர்டெல் திட்டத்தில் நீங்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்தின் பலனைப் பெறலாம், இது 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் . இதில், 22க்கும் மேற்பட்ட OTT ஆப்களில் என்டர்டைமென்ட் தொடர்பான கனேடென்ட் பார்க்கலாம். திட்டத்துடன் நீங்கள் அப்பல்லோ 24|7 வட்டத்தின் 3 மாத சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது.இதனுடன் இதில் இலவச Free HelloTunes நன்மை வழங்குகிறது, ஆனால் இந்த OTT திட்டத்தில் JioHotstar நன்மை கிடைக்காது
முதலில் இந்த இரு திட்டத்தின் விலை வித்தியாசத்தின் படி பார்த்தல் 30 நாட்கள் இருக்கிறது இதை தவிர இந்த திட்டத்தில் மற்ற நன்மை பற்றி ஒப்பிடும்போது டேட்டா, காலிங் மற்றும் SMS போன்ற இந்த அனைத்து நன்மைகளும் ஒரே மாதுரிதான் இருக்கிறது , ஆனால் Airtel இந்த திட்டத்தில் அதிகபட்சமான OTT நன்மை வழங்கப்படுகிறது ஆனால் இதில் JioHotstar நன்மை மட்டும் இல்லை
இதையும் படிங்க Jio யின் ரூ,195 திட்டத்தின் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் JioHotstar, கிரிகெட் பிரியர்களுக்கு மஜா தான்