Jio மற்றும் Airtel மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் மேலும் இவை இரண்டுமே ஒன்றோடு ஒன்று மோதும் விதமாக தினசரி புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்த இரு நிறுவனங்களும் 3GB டேட்டா வழங்கும் திட்டத்தை வருகிறது இந்த இரு நிறுவங்களும் 3GB டேட்டாவை தஹவிர ஒரே மாதுரியான நன்மைகளை வழங்குகிறது ஆனால் இதில் பெரிய வித்தியாசம் இதன் விலை தான் ஜியோவை விட ஏர்டெல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,100 அதிகம் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
முதலில் ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,449 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வருகிறது மற்றும் இதில் தினமும் 3 GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலங் மற்றும் தினமும் 100SMS வழங்குகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 84 GB டேட்டா வழங்குகிறது, இதனுடன் இந்தத் திட்டத்தின் மூலம் நிறுவனம் இரண்டு OTT சேவைகளை வழங்குகிறது, அங்கு நீங்கள் ஜியோ டிவி மற்றும் 50 ஜிபி ஜியோ கிளவுட்டின் நன்மைகளைப் பெற முடியும்.
நல்ல விஷயம் என்னவென்றால், தற்போது இந்த ஜியோ திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஜியோஹாட்ஸ்டாரின் 90 நாள் சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது. ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன, அதன்படி இந்த சலுகையில் இந்த சந்தா ஒரு முறை மட்டுமே கிடைக்கும். அதே நேரத்தில், மாதாந்திர திட்டம் முடிவடைவதற்கு 40 மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும், இல்லையெனில் சந்தா முடிவடையும். இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மை பெற முடியும்.
ஏர்டெல்லின் 3 ஜிபி தினசரி இன்டர்நெட் திட்டத்தைப் பற்றிப் பேசுகையில், இதன் விலை ரூ.549 ஆகும். இந்த திட்டத்தில், நிறுவனம் தினமும் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் அதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். அதாவது 28 நாட்களில் மொத்தம் 84 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது . ஏர்டெல்லின் 5G சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விரும்பினால், 4G அல்லது 5G போன்ற எந்தவொரு டேட்டா சேவையின் பலனையும் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம், நிறுவனம் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது.
கூடுதல் சேவைகளைப் பொறுத்தவரை, நீங்கள் 3 மாத ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாகப் வழங்குகிறது. இது தவிர, நிறுவனம் 28 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் சேவையையும் வழங்குகிறது, அங்கு நீங்கள் 22 க்கும் மேற்பட்ட OTT சேவைகளை இலவசமாக அனுபவிக்க முடியும். Zee5 OTT போன்ற சேவைகளும் இதில் கிடைக்கின்றன.
ஏர்டெல் மற்றும் ஜியோவின் இந்த 3 ஜிபி டேட்டா திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், ஏர்டெல்லின் திட்டம் ரூ.100 அதிகமாக இருப்பதைக் காண்பீர்கள். ஆனால் இந்த ஏர்டெல் திட்டத்தில் நீங்கள் நிறைய நன்மைகளையும் பெறலாம் . ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மூலம், நீங்கள் 90 நாட்கள் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாகப் பெறலாம் அதே போல ஜியோவும் அதன் JioHotstar Mobile/TV சப்ஸ்க்ரிப்சன் 90 நாட்களுக்கு வழங்குகிறது இருப்பினும் இதில் ஏர்டெல் கூடுதலாக Zee5 சப்ச்க்ரிப்சன் உட்பட 22 க்கும் மேற்பட்ட OTT சேவைகளை இலவசமாக வழங்குகிறது எனவே இதில் பெரிய வித்தியாசம் விலை மற்றும் இதன் OTT சேவை எனவே இந்த திட்டத்தில் எது அதிக நன்மையை தருகிறது என நீங்க சொல்லுங்க.
இதையும் படிங்க:Jio யின் 5G திட்டத்தில் இது தான் மிக மிக குறைவு அன்லிமிடெட் காலிங்,டேட்டா என எல்லாமே பக்கா மாஸ்