jio most affordable data vouchers for new year 2025
இந்தியாவின் முதல் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio, அதன் ரூ,19 மற்றும் ரூ,29 கொண்ட திட்டத்தின் வெளிட்ட்டியை மாற்றியது, இந்த இரண்டு திட்டங்களும் டேட்டா வவுச்சர் திட்டமாகும, முன்பு சில மாதங்களுக்கு முன் இந்த திட்டத்தின் விலை ஜியோ ரூ.15 மற்றும் ரூ.25 டேட்டா வவுச்சர்களின் விலையாக இருந்தது அதன் பிறகு இதன் விலை ரூ.19 மற்றும் ரூ.29 ஆக உயர்த்தியது. இருப்பினும், அவற்றுடன் வழங்கப்பட்ட பலன்கள் தொடர்ந்து இருந்தன, அவை இப்போது மாற்றப்பட்டுள்ளன.
Jio ரூ,19 மற்றும் ரூ, 29 டேட்டா வவுச்சர் வேலிடிட்டி
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.19 டேட்டா வவுச்சர் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. முன்னதாக இந்த வவுச்சரின் வேலிடிட்டி அடிப்படை திட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதாவது, நீங்கள் 30 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்திருந்தால், 19 ரூபாய்க்கு கிடைக்கும் 1 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வேளிடிட்டியாக இருக்கும் . இப்போது இது 1 நாள் மட்டுமே வேலிடிட்டியாகும் . ரூ.19 டேட்டா வவுச்சரை நீங்கள் தேர்வு செய்தால், அந்த 1 ஜிபி டேட்டாவை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் அது காலாவதியாகிவிடும்.
JIO Data pack
இதேபோல், ரூ.29 டேட்டா வவுச்சரின் வேலிடிட்டியாகும் அடிப்படை திட்டத்துடன் முன்பு இணைக்கப்பட்டது. இப்போது இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வரும். இந்த டேட்டா வவுச்சரில் இரண்டு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த முடிவு மிகவும் யோசித்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பல கஸ்டமர்கள் நீண்ட காலமாக இத்தகைய டேட்டா வவுச்சர்களைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் இது இனி சாத்தியமில்லை. ஜியோவின் போட்டியாளரான ஏர்டெல் நிறுவனமும் இதே போன்ற டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. இது எந்த டேட்டா வவுச்சரையும் தற்போதுள்ள ரீசார்ஜின் வேலிடிட்டியுடன் இணைக்கவில்லை. அதாவது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 2 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.