JioHom
Jio 9th Anniversary Offer சலுகையின் ஒரு பகுதியாக , நிறுவனம் தனது கஸ்டமர்களுக்கு இரண்டு மாத ஜியோ ஹோம் சேவையை இலவசமாக அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், இந்த சலுகை ஜியோ போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மட்டுமே வேலிடிட்டியாகும் மற்றும் ரூ,349 அல்லது அதற்கு மேற்பட்ட மாதாந்திர திட்டத்தைக் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள் மட்டுமே இந்த நன்மை பெற முடியும். மேலும் இதில் JioHome யின் இரண்டு மாத இலவச டெஸ்ட்டிங் வழங்கும் என அறிவித்தது இவை அனைத்தும் கூடுதல் கட்டணம் இல்லாமல் கிடைக்கும் என கூறியது .
ஜியோவின் கூற்றுப்படி, ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தின் 12 மாதாந்திர சரியான நேரத்தில் ரீசார்ஜ் செய்தால், 13வது மாதத்திற்கு இலவச ரீசார்ஜ் கிடைக்கும்.
ஜியோஹோம் கஸ்டமர்களுக்கு அதன் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சலுகைகளையும் டெலிகாம் ஆபரேட்டர் அறிவித்துள்ளது. செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை, மட்டுமே கஸ்டமர்களுக்கு கிடைக்கும் ரூ.1,200க்கு வரும் இரண்டு மாத ஜியோஹோம் கனெக்ஷன் இலவசமாக கிடைக்கிறது. இதில் ஜியோஹோம் சேவை, 1,000க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், 30Mbps அன்லிமிடெட் டேட்டா, 12க்கும் மேற்பட்ட OTT ஆப்களுக்கான சப்ஸ்க்ரிப்சன் , வைஃபை 6 ரூட்டர் மற்றும் 4K செட்-டாப் பாக்ஸ் ஆகியவை அடங்கும்.
உங்கள் தகவலுக்கு, ஜியோ ஹோம் திட்டங்களின் ஆரம்ப விலை ₹599. இந்தத் திட்டம் ஜியோ ஹாட்ஸ்டார், சோனி எல்ஐவி மற்றும் இசட்5 போன்ற OTT தளங்களுக்கு இலவச சந்தாக்களை வழங்குகிறது. கூடுதலாக, இந்தத் திட்டம் 30 Mbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இரண்டாவது திட்டத்தின் விலை ₹899, மூன்றாவது திட்டத்தின் விலை ₹1199. இந்தத் திட்டங்கள் அனைத்தும் பல நன்மைகளுடன் வருகின்றன.